பள்ளி ஆசிரியையிடம் உல்லாசமாக இருந்த கல்லூரி பேராசிரியர்! திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் நடந்த விபரீதம்!!
college professor was in love with the school teacher

பள்ளி ஆசிரியையை திருமணம் செய்துகொள்வதாக அசைவார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்த கல்லூரி பேராசிரியர், தற்பொழுது திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்த சின்னமணி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான 27 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இது காதலாக மாறியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். அப்போது சின்னமணி, ஆசிரியையிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த ஆசிரியை சின்னமணி வீட்டுக்கு சென்ற, அவரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு சின்னமணி திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து தனது உறவினர்களுடன் சேர்ந்து, ஆசிரியையை தாக்கியதாக கூறுகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கோபாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி பேராசிரியர் சின்னமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.