தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உல்லாசத்தில் உள்ளாடையை மறந்த உதவியாளர்; கலெக்டரின் உதவியாளர் கொலை வழக்கில் சிக்கியது எப்படி?

உல்லாசத்தில் உள்ளாடையை மறந்த உதவியாளர்; கலெக்டரின் உதவியாளர் கொலை வழக்கில் சிக்கியது எப்படி?

collector-pa-killed-near-pudukottai Advertisement

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் திருச்சியை சேர்ந்த பூபதிகண்ணன். இவர் கடந்த 28-ந்தேதி காலை திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே காட்டுப்பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் அதே அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிந்துவந்த திருச்சி நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த சவுந்தர்யா என்பவருடன், பூபதி கண்ணன் காரில் சென்றது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியிருந்தது.

collecter PA

அதைத்தொடர்ந்து சவுந்தர்யாவை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சவுந்தர்யா கூறுகையில்,

ஒரே அலுவலகத்தில் வேலை செய்ததாலும், பூபதிகண்ணன் உயர் அதிகாரி என்பதாலும் அவரின் நட்பு எனக்கு கிடைத்தது. குடும்ப சூழ்நிலையை சொல்லி பல லட்ச ரூபாய் அவரிடம் பெற்றுள்ளேன். இதனால் எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

தினமும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு அவர் காரில் செல்வது வழக்கம். பணிமுடிந்து ஊர் திரும்பும் வேளையில் தேவைப்படும்போது, மாத்தூர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு காரில் செல்வோம். அங்கு காரிலேயே இருவரும் உல்லாசம் அனுபவிப்போம்.

கடந்த 27-ந்தேதி மாலை பணிமுடிந்து காரில் திரும்பியபோது மாத்தூர் காட்டுப்பகுதியில் காரில் வைத்து உல்லாசம் அனுபவித்தோம். பின்னர் பூபதிகண்ணன் சிறுநீர் கழிப்பதற்காக காரில் இருந்து இறங்கி சற்று ஒதுக்குப்புறமான இடத்துக்கு சென்றார்.

சிறிது நேரத்தில் கத்திக்குத்து காயங்களுடன் அலறியபடி ரத்தம் சொட்ட சொட்ட ஓடிவந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து கையில் கத்தியுடன் வந்த நபர், கத்தியை என் கையில் கொடுத்து, நீயும் 2 குத்து கத்தியால் பூபதிகண்ணனை குத்து என்று மிரட்டினான். வேறுவழியின்றி நானும் கத்தியால் அவரை குத்தினேன்.

அதன்பின்னர் கத்தியை கையில் வாங்கிய மர்மநபர் மீண்டும் அவரை கத்தியால் குத்தினான். பூபதி கண்ணன் கார் அருகிலேயே சரிந்து விழுந்து விட்டார். நான், அவர் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். கொலைகார ஆசாமி யார் என்றே எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை நடந்த பதற்றத்தில் காரில் கழற்றிப்போட்ட உள்ளாடையை சவுந்தர்யா எடுக்க மறந்து, அதை காரிலேயே விட்டு சென்று விட்டார். போலீசார் காரில் கிடந்த உள்ளாடையை வைத்துதான் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்தபோதுதான் கொலை நடந்துள்ளது என்பதை உறுதி செய்ய முடிந்தது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#collecter PA #pudukottai murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story