×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எதற்காக ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடவேண்டும்: மோகன் பகவத் பரபரப்பு பேச்சு..!

எதற்காக ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடவேண்டும்: மோகன் பகவத் பரபரப்பு பேச்சு..!

Advertisement

கியான்வாபி சர்ச்சை இன்றைக்கு உருவானது அல்ல என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், நம் நாட்டில் சமீபகாலமாக சில பிரசித்த பெற்ற இந்து கோயில்கள் குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

வரலாற்றை நம்மால் மாற்ற முடியாது. கியான்வாபி சர்ச்சை இன்றைக்கு ஏற்பட்டது அல்ல. அதற்கு இப்போது உள்ள  முஸ்லிம்களோ அல்லது  இந்துக்களோ காரணமாக இருக்க முடியாது. இது எப்போதோ நடந்த சம்பவம். இஸ்லாம் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த மதம். அடக்கி ஆள நினைத்தவர்கள் கொண்டுவந்த மதம்.

அப்போது விடுதலை வேட்கையில் இருந்து நம் மக்களை உணர்வுபூர்வமாக தாக்க தேவஸ்தானங்களும், ஆயிரக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன. சில இந்துக் கோயில்களுக்கு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. அதாவது கியான்வாபி போல் இந்துக் கோயிலில் மசூதி இருக்கிறது.

இதைத் தான் தற்போது இந்துகள் கேள்விக்கு உள்ளாக்குகின்றனரே தவிர இந்துக்கள் முஸ்லிகளுக்கு எதிரானவர்கள் இல்லை. ஏனெனில் இப்போதைய முஸ்லிம்களின் மூதாதையர்கள் அனைவருமே இந்துக்களாக இருந்தவர்கள் தானே? ஒருசில இடங்களில் நமக்கு நம்பிக்கை இருக்கலாம். அதைப்பற்றி நாம் பேசலாம். அதற்காக தினமும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்த அவசியம் என்ன இருக்கிறது. எதற்காக ஒவ்வொரு மசூதியிலும்  சிவலிங்கத்தை தேட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் எந்தவிதமான மத வழிபாட்டுக்கும் எதிரானது அல்ல. நாங்கள் எல்லா மத வழிபாட்டையும் புனிதமானதாகவே கருதுகிறோம். சிலர் முஸ்லிம் வழிபாட்டு முறையை தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே ரிஷிகளின், முனிகளின், சத்ரியர்களின் வழித்தோன்றல் தானே. நம் அனைவருக்கும் ஒரே மூதாதையர் தான். இவ்வாறு மோகன் பகவத் உரையாற்றினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mohan Bhagwat #Rss #RSS Leader #Gyanvabi #Varanasi #Uttar pradesh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story