"என் மகன் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு..?" விஜய்யின் தந்தை பரபரப்புப் பேச்சு
what problem if vijay comes to politics
தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் அரசியல் பயணத்தைப் பற்றி பேசியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனால் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அப்போது பேசிய அவர் "இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலில் இறங்குவதற்கான தகுதி உள்ளது. மருத்துவர்கள், ஆசிரியர்கள், சாதாரண தொழிலாளர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம் என்ற போது நடிகர்கள் அரசியலில் வருவதில் மட்டும் ஏன் சிலருக்கு கோபம் வருகிறது. எனது மகன் விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு பலர் அச்சப்படுகின்றனர்.
விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? அவர் தமிழக மக்களால் தமிழக ரசிகர்களால் வளர்ந்தவர். அந்த தமிழர்களுக்காக விஜய் ஏதாவது செய்ய வேண்டும் என்பது தமிழனாகிய எனது விருப்பம். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் நான் விரும்புகிறேன். ஆனால் விஜய் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி கேட்டாலே பலருக்கு இங்கு கோபம் வருகிறது மற்றும் அவரை எதிர்த்து நிற்கிறார்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை.
தமிழ் நாட்டில் ஊழல் அற்ற சேவை மனப்பான்மையுடன் பணியாற்றக்கூடிய தலைவர்கள் வர வேண்டும் என்பதே எனது விருப்பம்." என்று கூறியுள்ளார்.