×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விசில் சத்தம் தாங்க முடியலையா? அச்சத்தின் உச்சத்தில் தமிழக அரசு.. தவெக விஜய் கடும் தாக்கு.!

TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையை ஏற்றுக்கொள்ள இயலாத அரசு 13ம் தேதியே மகளிர் உரிமைத் தொகையை வரவு வைத்துள்ளது என விஜய் விமர்சித்துள்ளார். 

Advertisement

தேர்தல் தோல்வியை கருத்தில் கொண்டே குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.5000 பணம் வழங்கி இருக்கிறது என விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாதம்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையுடன், கோடைகால சிறப்புத்தொகையை வரவு வைத்து இருக்கிறார். இது தமிழக மக்களிடையே வரவேற்பை அடையும் விஷயம் என்றாலும், தேர்தலுக்கு முன்பே தேர்தல் வரை மாதம் ரூ.1000 என 3 மாதத்துக்கு ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத்தொகை ரூ.2000 என மொத்தமாக ரூ.5000 வரை வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், தேர்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளை கவரும் விஷயம் இது என கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

13ம் தேதியை வரவு ஏன்? 

இதுதொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைப்பக்கத்தில், "புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்? 

இதையும் படிங்க: குஷியோ குஷி! 15 லட்சம் பேருக்கு டிச- 12 முதல் ரூ.1000, பொங்கல் பரிசாக ரூ.5000...! திமுக அரசின் சூப்பர் அறிவிப்பு!

விசில் சத்தம் நல்லது:

இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். 

பணத்தை வாங்கிக்கோங்க:

அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்துள்ளார். எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

ஆட்சி வந்ததும் மாற்றம்:

நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. தி.மு.க. அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Pongal Gift Tamilnadu: பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ.3000? ஒதுக்கீடு செய்த அரசு.. விரைவில் தித்திப்பு செய்தி..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #TVK Vijay #MK Stalin #Magalir Urimaithogai #மகளிர் உரிமைத்தொகை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story