"ஓட்டுக்காக கேப்டனை பயன்படுத்தும் விஜய்.." சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்.!!
ஓட்டுக்காக கேப்டனை பயன்படுத்தும் விஜய்.. சீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரேமலதா விஜயகாந்த்.!!
ஓட்டுக்காக விஜயகாந்த் குறித்து நடிகர் விஜய் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கருத்து குறித்து மறைந்த நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், சீமானுக்கு ஆதரவாக பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தை மேலும் பரபரப்பாக்கி இருக்கிறது.
கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், தேமுதிக கட்சியின் நிறுவனரான விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்து பேசினார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சீமான், விஜயகாந்த் உயிரோடிருக்கும் வரை அவரை சென்று விஜய் பார்த்ததில்லை. ஆனால் இன்று ஓட்டுக்காக அவரது பெயரை பயன்படுத்துகிறார் என தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சீமானின் கருத்திற்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது விஜய் ஒரு முறை கூட அவரை வந்து பார்க்கவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் விஜயகாந்தின் மறைவின் போது தான் விஜய் வந்து இறுதி மரியாதை செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "அவுட் ஆஃப் கண்ட்ரோல் இல்ல; அண்டர் தி கண்ட்ரோல் தான்..." முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு சீமான் பதிலடி.!!
எனவே சீமான் கூறிய கருத்து என்பது உலகறிந்த உண்மை. அதில் எந்தவித சர்ச்சையும் இல்லை எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். மேலும் நடிகர் விஜய்யை சந்தித்தால் இது குறித்து நான் கேட்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மதுரை மாநாட்டில் விஜய் பேசிய பல கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "கொடி கம்பமே நட தெரியல நீங்க அடுத்த முதல்வரா..." நடிகர் விஜய்க்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி.!!