விஜய் முதல்வர் ஆன பின் நடந்த அந்த 10 நாள் கூத்தை பாருங்க.... அம்பலமான தவெக-வின் அதிரடி உண்மைகள்...!!!
விஜய் தலைமையிலான தவெக அரசைச் சுற்றி சமூக வலைதளங்களில் பரவும் போலிச் செய்திகள் குறித்து ‘தி ஹிந்து’ உண்மை கண்டறியும் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பிறகு, சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை உண்மைக்கு புறம்பானவை என்றும், இதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட பிரசாரங்கள் எதிர்காலத்தில் அரசுக்கே பாதிப்பாக மாறலாம் என்றும் ‘தி ஹிந்து’ நாளிதழ் எச்சரித்துள்ளது.
‘தி இன்விசிபிள் கேம்’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரையில், சமூக வலைதள அல்காரிதம்கள் உண்மையான தகவல்களை விட உணர்ச்சியை தூண்டும் போலிச் செய்திகளை அதிகமாக மக்களிடம் கொண்டு செல்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில் பரவிய தவறான தகவல்கள்
‘தி ஹிந்து’ உண்மை கண்டறியும் குழுத் தலைவர் டி. சுரேஷ் குமார் வெளியிட்ட தகவலின்படி, தவெக ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு தகவல்களை போட்டி போட்டுக் கொண்டு பகிர்ந்துள்ளனர். இவை தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வைரலாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்....அதிமுக- தவெக கூட்டணியா? அதிகாரப்பூர்வ விளக்கம்....தவெக பொதுச்செயலாளரின் அதிரடி அறிவிப்பு!!!
அதில் முக்கியமாக, பொதுத் தொகுதிகளில் தவெக 28 எஸ்சி வேட்பாளர்களை நிறுத்தியதாகப் பரப்பப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ பட்டியலில் சங்கராபுரம் தொகுதியில் மட்டும் ஒரே ஒரு எஸ்சி வேட்பாளர் இருந்ததாகவும், அவரும் வெற்றி பெறவில்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அமைச்சர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்கள் எனக் காட்டப்பட்ட வீடியோக்கள் வைரலான நிலையில், தேர்தல் ஆவணங்களில் அவர்கள் கோடிக்கணக்கான சொத்துக்கள் வைத்திருப்பது குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஐ படங்கள் முதல் தவறான வரலாறு வரை
தவெக எம்.எல்.ஏக்களின் கல்வித் தகுதி என சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு கிராபிக்ஸில், கணக்கே தவறாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மொத்தம் 126 எம்.எல்.ஏக்கள் இருப்பது போல எண்கள் இருந்தாலும், கட்சி வென்றது 108 இடங்களே என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் முதல் பெண் அமைச்சர் மற்றும் முதல் தலித் கல்வி அமைச்சரை விஜய் தான் நியமித்தார் என்ற தகவலும் பரவியது. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே பெண் முதலமைச்சர்கள் இருந்ததோடு, காமராஜர் ஆட்சிக்காலத்திலேயே கக்கன் உள்ளிட்ட தலித் தலைவர்கள் அமைச்சராக பதவி வகித்துள்ளனர் என்பதையும் கட்டுரை நினைவுபடுத்துகிறது.
மேலும், முதலமைச்சர் விஜய் சாதாரண டிபன் பாக்ஸில் உணவருந்துவது போன்ற ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களும் வைரலானது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளையும் புதிய அரசின் சாதனையாகக் காட்டிய பதிவுகளும் அதிகமாகப் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.
‘போலிப் புகழ்ச்சி ஆபத்தாக முடியும்’
வனத்துறை ஆண்டுதோறும் மேற்கொள்ளும் ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் பணியையும், விஜய் அரசின் புதிய முயற்சி என வடஇந்தியாவில் இந்தியில் பரப்பியிருப்பது உச்சக்கட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவலின்படி, இத்தகைய போலிச் செய்திகள் மற்றும் அளவுக்கு மீறிய புகழ்ச்சிகள், எதிர்காலத்தில் அரசு செய்யும் உண்மையான பணிகளின் மீதான நம்பிக்கையையே பாதிக்கக்கூடும் என ‘தி ஹிந்து’ கட்டுரை எச்சரிக்கிறது.
அதனால், அரசு தரப்பில் விளம்பரங்களை மட்டும் செய்வதை விட தவறான தகவல்களை உடனுக்குடன் மறுக்கும் நடவடிக்கையும் அவசியம் என்றும், முதலமைச்சர் விஜய்யே நேரடியாக தனது ஆதரவாளர்களின் மிகைப்படுத்தப்பட்ட பிரசாரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போடு வெடிய....முடிந்தது கணக்கு....மிரள போகுது கோட்டை! 118 எம்.எல்.ஏ-க்களின் லிஸ்ட் ரெடி...!!!