×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரீஹர்சல் ஒழுங்கா பண்ணலையோ ? இடைத்தேர்தல் தோல்வி பயம் படுத்தும் பாடு... CM விஜய் டிராக்டர் ஓட்டிய வீடியோவை வச்சு செஞ்ச அதிமுக ஐடி விங்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விஜய் 45 கி.மீ. ரோடு ஷோ நடத்தி, டீக்கடையில் டீ குடித்ததுடன் வயலில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரித்தார்.

Advertisement

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக சுமார் 45 கி.மீ. தூரம் ரோடு ஷோ மேற்கொண்ட அவர், வழியில் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தும், வயலில் வேலை செய்த பெண்ணிடம் பேசியும் வாக்கு சேகரித்தார். இதற்கிடையே வயல்வெளியில் டிராக்டர் ஓட்டி விஜய் பிரசாரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விஜய் பிரசாரம்

அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை மாமண்டூர் பகுதியில் இருந்து விஜய்யின் ரோடு ஷோ தொடங்கியது. தொகுதிக்குட்பட்ட சுமார் 35 கிராமங்கள் வழியாக சென்ற அவர், பொதுமக்களை சந்தித்து தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டினார். ரோடு ஷோவின் பாதை சுமார் 45 கி.மீ. என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இதுதாங்க நடந்துச்சு... அதிமுக ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி தினகரன்...! அரசியல் நாடகம் நடத்துவதாக குற்றச்சாட்டு!!!

டீக்கடை முதல் வயல்வெளி வரை

பிரசார வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விஜய், எதிர்பாராத வகையில் வழியிலிருந்த உள்ளூர் டீக்கடையில் நின்றார். அங்கு பொதுமக்களுடன் உரையாடியபடி டீ அருந்தினார். தொடர்ந்து வயல்வெளிக்குச் சென்ற அவர், விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடமும் பேசினார். இதையடுத்து வயலில் இருந்த டிராக்டரில் ஏறி அதை இயக்கியபடி சிறிது தூரம் சென்று வாக்கு சேகரித்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

டிராக்டர் வீடியோவை விமர்சித்த அதிமுக ஐடி விங்

விஜய் டிராக்டர் ஓட்டிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு அதிமுக ஐடி விங் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துள்ளது. டிராக்டர் ஓட்டும்போது அவர் தடுமாறியதாகக் குறிப்பிட்டு, “தோல்வி பயம் படுத்தும் பாடு” என கேலி செய்துள்ளது. மேலும், ஏற்கனவே சமூக வலைதளங்களில் பேசுபொருளான “பாண்டியம்மா” ஆடியோவையும் விஜய்யின் டிராக்டர் வீடியோவுடன் இணைத்து பதிவிட்டு கிண்டல் செய்துள்ளது. இந்த பதிவு தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

 

இதையும் படிங்க: போன் கால் வந்ததும்.. போட்ட ஆக்டிங்..! CM விஜய் மேடையில் நடத்தியது அரசியல் நாடகம்! கிழித்தெடுத்த திமுக கனிமொழி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விஜய் ரோடு ஷோ #மதுராந்தகம் இடைத்தேர்தல் #TVK Vijay #டிராக்டர் பிரசாரம் #AIADMK IT Wing
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story