நீங்க பேசுங்க... விஜய் சேதுபதிக்கு ஆதரவா நாங்க நிற்ப்போம்! CM விஜய்கு எதிராக களத்தில் இறங்கிய அதிமுக...!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஆதரவாக அதிமுக எம்பி இன்பதுரை வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்து தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக எம்பி இன்பதுரை வெளியிட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
பிக்பாஸ் டாஸ்க்கில் விஜய் சேதுபதி பேசியது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றின்போது தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். தலைமை என்றால் என்னவென்றே தெரியாமல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, பிரச்சினைகள் வரும்போது எதிரணியினர் மீது பழியை சுமத்திவிட்டு தப்பிப்பது தலைமைக்கான தகுதி அல்ல என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சற்று முன்.. இடைத்தேர்தல் நேரத்தில் இப்படியா? தவெகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி! செம ஷாக்கில் CM விஜய்!!!
மேலும், பொறுப்புகளை ஏற்காமல் பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்வது ஏமாற்று வேலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சியில் நடைபெற்ற டாஸ்க்கை மையமாகக் கொண்டே இந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், தற்போது நிலவும் அரசியல் சூழலுடன் அதை இணைத்து சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.
தவெக ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதன் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாக பதிலளிப்பதில்லை என்றும், பொறுப்புகளில் இருந்து விலகிச் செல்கிறார் என்றும் திமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பின்னணியில் விஜய் சேதுபதியின் பேச்சு வெளியானதால், அது முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாக தவெக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் நடிகருக்கு எதிரான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.
கருத்துரிமைக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக
சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், அதிமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்துரிமையைப் பாதுகாக்க சட்டரீதியாக உறுதியுடன் துணை நிற்போம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியின் கருத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதிமுக அவருக்கு ஆதரவாக நிற்கும் என்ற நிலைப்பாட்டை இன்பதுரையின் பதிவு வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கிய சர்ச்சை தற்போது தவெக - அதிமுக இடையிலான அரசியல் விவாதமாகவும் மாறியுள்ளது.
இதையும் படிங்க: நீங்க என்ன சொல்றது... கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர் விஜய்! எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!