அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை! உறுப்பினர் அட்டையில் தவெக விஜய் செய்த தரமான சம்பவம்.... இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம்.!
தமிழகத்தில் 2026 தேர்தல் சூடு ஏறியுள்ள நிலையில் விஜயின் புதுச்சேரி ரோடு ஷோ அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. கட் அவுட் சர்ச்சையும் வேகம் பெறுகிறது.
தமிழகத்தில் தேர்தல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல் அரங்கில் நடிகர்-அரசியல்வாதி விஜயின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளன. 2026 தேர்தல் படிப்படியாக நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் இடத்தை பலப்படுத்த முயற்சிக்கின்றன.
புதுச்சேரி ரோடு ஷோ – அனுமதி சிக்கல்
விஜய் களத்தில் இறங்கியதால் வரவிருக்கும் 2026 தேர்தல் மேலும் பரபரப்பாகியுள்ளது. கடந்த செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவத்திற்குப் பிறகு, விஜய் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செம குஷியில் எடப்பாடி! இரவோடு இரவாக அதிமுகவில் கூண்டோடு ஐக்கியமான 50 க்கும் மேற்பட்டோர்! சால்வை அணிவித்து அமர்க்கள படுத்திய EPS!
இதன்படி டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் இரண்டு முறை மனு அளித்தும் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால், விஜய் தரப்பில் அதிர்ச்சியும் ஏமாற்றமும் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆனந்த், புதுச்சேரி ஐஜி அலுவலகத்தில் மூன்றாவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார்.
மாற்றுக் கட்சியினரை இணைக்கும் முயற்சிகள்
ஒருபுறம் ரோடு ஷோ அனுமதி பிரச்சனை நீடிக்க, மறுபுறம் மாற்றுக் கட்சியினரை தங்கள் அணியில் சேர்க்கும் முயற்சியில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மதுரையில் நடைபெற்ற விழாவில் 100க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.
‘கட் அவுட்’ சர்ச்சை – சமூக வலைதளங்களில் வைரல்
இந்த விழாவில் விஜய் நேரில் பங்கேற்கவில்லை; ஆனால் அவரது கட் அவுட் மூலமாகவே புதிய உறுப்பினர்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த அசாதாரண நிகழ்வு புகைப்படங்களாக வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“இந்திய அரசியல் வரலாற்றில் கட் அவுட் மூலம் உறுப்பினர் அட்டை வழங்கிய முதல் கட்சி TVK தான்” என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் விஜயின் அரசியல் பயணம் மீண்டும் ஊடகங்களிலும் இணையத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தல் நெருங்கும் நிலையில், ரோடு ஷோ அனுமதி விவகாரமும் கட்டவுட் சர்ச்சையும் விஜயின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மீது மேலும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் சூழலில் திடீர் திருப்பம்! சற்றுமுன்...500-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கட்சியில் இணைவு! அரசியல் பலத்தை காட்டும் திருமா..!