முதல்வர் விஜய்க்கு வந்த அதிர்ச்சி செய்தி...! உடனே வீட்டிற்கு விரைந்த விஜய்.. அரசியல் மற்றும் திரையுலகினர் அஞ்சலி..!!!
முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகரன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நீலாங்கரை இல்லத்தில் அவரது உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகரன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், இன்று தனது நீலாங்கரை இல்லத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த முதலமைச்சர் விஜய், உடனடியாக அங்கு சென்று பெரியம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் காலமான அமல் ராஜசேகரன்
அமல் ராஜசேகரன், விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் ராஜசேகரனின் மனைவி ஆவார். வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
இதையும் படிங்க: அலறும் அமைச்சர்கள்...! ரகசிய ஸ்பை... இரவோடு இரவாக CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!!!
நீலாங்கரை இல்லத்தில் விஜய் நேரில் அஞ்சலி
பெரியம்மாவின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த அமல் ராஜசேகரனின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், சிறிது நேரம் மௌனமாக நின்று தனது இரங்கலைத் தெரிவித்தார்.
குடும்பத்தினருடன் வந்த எஸ்.ஏ.சந்திரசேகர்
இதற்கு முன்பாகவே விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் நீலாங்கரை இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு வந்த விஜய், தனது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களை அணைத்து ஆறுதல் கூறினார். குடும்பத்தினர் அனைவரும் சோகத்துடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: அன்னைக்கு அந்த காரிலேயே முடிச்சிருக்கலாம்....! CM விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சற்று முன் கைது...!!!