"யாரும் வீட்டுக்கு போகக்கூடாது.!" த.வெ.க MLA -க்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய்.!
யாரும் வீட்டுக்கு போகக்கூடாது.! த.வெ.க MLA -க்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய்.!
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. மே 4ஆம் தேதியான நேற்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தமிழகம் தாண்டி பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு காரணம் தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சி தான்.
முதல்முறையாக கட்சி தொடங்கி, எந்த ஒரு அடிப்படை கட்டமைப்பும் இல்லாமல், பெரிய அளவில் பிரச்சாரங்கள் கூட செய்யாமல் அதிகப்படியான தொகுதிகளை வென்றுள்ளது. இது எந்த கருத்துக்கணிப்பிலும் கூட எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும்.
இந்த நிலையில், 108 இடங்களில் TVK வென்றிருந்தாலும், அவர்கள் ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவைப்படுகின்றன. தற்போது பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் TVK ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: முன்னிலையில் தவெக.. எம்.ஜி.ஆர் காலத்துக்கு பின்.. தமிழக தேர்தலில் கவனம் ஈர்த்த விஜய்..!
பனையூரில் இருக்கும் த.வெ.க அலுவலகத்தில் தற்போது தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுடன் உடன் விஜய் ஆலோசித்து வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளாராம். அதில பதவி ஏற்கும் வரை வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னையிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "திமுகவின் மைனாரிட்டி அரசு?"... பெரும்பான்மைக்கு விஜய் என்ன செய்ய போகிறார்.?!