×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீலாங்கரை வீட்டை காலி செய்த முதல்வர் விஜய்! இனி வெற்றி இல்லம் தான்... பின்னால் இருக்கும் அந்த ஒரு காரணம்..!!!

சென்னை நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகம் செல்வதில் ஏற்படும் போக்குவரத்து சிரமத்தைக் குறைக்க, பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தை முதல்வர் விஜய் தனது முகாம் அலுவலகமாக மாற்றியுள்ளார்.

Advertisement

சென்னை நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று வந்த முதல்வர் விஜய், தற்போது தனது முகாம் அலுவலகத்தை பசுமை வழிச்சாலைக்கு மாற்றியுள்ளார். பொதிகை வளாகத்தில் உள்ள பாமணி அரசு விருந்தினர் இல்லம் புதுப்பிக்கப்பட்டு ‘வெற்றி இல்லம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த நிலையில், முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், அங்கு குடியேறவும் திட்டமிட்டுள்ளார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய ஏற்பாடு

முதல்வர் விஜய் இதுவரை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகத்துக்குத் தினமும் பயணம் செய்து வந்தார். இரு இடங்களுக்கும் இடையே சுமார் 19 கிலோமீட்டர் தொலைவு இருப்பதால், பாதுகாப்புக்காக வழிநெடுகிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டனர். இதனால் அந்தப் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தவெகவின் அடுத்தக்கட்ட பிளான்..! துணை முதல்வர் பதவிக்கு குறி வைக்கும் பாமக? அதிரும் தவெக தலைமை..! வாக்கு வித்தியாசத்தை கண்டு விஜய் எடுத்த திடீர் முடிவு..!!!

பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதுடன், தலைமைச் செயலகத்துக்கு விரைவாகச் செல்லும் வகையிலும் அருகிலேயே தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பசுமை வழிச்சாலையில் உள்ள பொதிகை வளாகத்தின் பாமணி அரசு விருந்தினர் இல்லத்தை முகாம் அலுவலகமாகப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

‘பாமணி’ இல்லம் இனி ‘வெற்றி இல்லம்’

தலைமைச் செயலகத்தில் இருந்து சுமார் 15 நிமிடப் பயணத் தொலைவில் அமைந்துள்ள இந்த இல்லம், தற்போது முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ‘வெற்றி இல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய முகாம் அலுவலகத்தை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இன்று முதல் அவர் அங்கு தங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் வசிக்கும் பாதுகாப்பான பகுதியில் இந்த இல்லம் அமைந்துள்ளது. அருகிலேயே அமைச்சர்கள் ராஜ்மோகன், ராஜேஷ், பர்வேஷ், விக்னேஷ், வினோத் ஆகியோரின் இல்லங்களும், தலைமை நீதிபதியின் இல்லமும் உள்ளன. இதனால் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் எளிதாக வந்து செல்லவும், அவசர ஆலோசனைகளை விரைவாக நடத்தவும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமணி ஆற்றின் பெயரில் அமைந்த இல்லம்

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் வழியாகப் பாயும் காவிரி ஆற்றின் கிளை நதியான பாமணி ஆற்றின் பெயரே இந்த அரசு விருந்தினர் இல்லத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தளவாய் சுந்தரம் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்டோர் தங்கியிருந்துள்ளனர்.

 

இதையும் படிங்க: திட்டம்போட்டு காய் நகர்த்தும் திமுக..! கனிமொழிக்கு முக்கிய பதவி.... நவ.15-க்குப் பிறகு திமுகவில் நடக்கப் போகும் நிர்வாக மாற்றம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#முதல்வர் விஜய் #வெற்றி இல்லம் #பாமணி அரசு விருந்தினர் இல்லம் #Vijay Camp Office #சென்னை தலைமைச் செயலகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story