×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அய்யோ.. டம்ளர கவுக்காமலே டீ குடிக்கிற வித்தை...! முதல்வர் விஜய்யை பகிரங்கமாக கலாய்த்து தள்ளிய திமுக ஐடி விங்...! வைரல் வீடியோ..!!!

மதுராந்தகம் பிரசாரத்தில் டீக்கடையில் தேநீர் அருந்தியும் வயலில் டிராக்டர் ஓட்டியும் விஜய் வாக்கு சேகரித்தார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

Advertisement

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று தீவிரமாக ஈடுபட்டார். மாமண்டூரில் தொடங்கிய அவரது ரோடு ஷோ பல்வேறு கிராமங்கள் வழியாக நடைபெற்றது. வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டிய விஜய்

பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக வயல்வெளிக்குச் சென்ற விஜய், அங்கு விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேசி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து வயலில் இருந்த டிராக்டரை அவரே ஓட்டிய காட்சிகள் வெளியாகின. வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து விஜய் டிராக்டர் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இந்த விஜய் இருக்கும் வரைக்கும் திமுக-வுக்கு இனி இதுதான் நிலைமை! மேடையிலேயே வெடிகுண்டை தூக்கிப் போட்ட முதல்வர் விஜய்.. திமுக - அதிமுகவுக்கு ஓபன் சேலஞ்ச்..!!!

டீக்கடையில் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

இதையடுத்து, பிரசார வாகனத்தை நிறுத்திய விஜய் அருகிலிருந்த சிறிய தேநீர் கடைக்குச் சென்றார். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்களுடன் இயல்பாக உரையாடியபடியே தேநீர் அருந்தி வாக்கு சேகரித்தார். விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் தொடங்கிய விமர்சனம்

விஜய்யின் தேநீர் கடை சந்திப்பு தொடர்பான காட்சிகள் வெளியான நிலையில், அவரது பிரசார அணுகுமுறை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டீ குடிக்கும் காட்சியை மையமாக வைத்து எதிர்க்கட்சியினர் தரப்பில் விமர்சனங்களும் வெளியாகியுள்ளன. இதனால் மதுராந்தகம் பிரசாரக் காட்சிகள் இணையத்தில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன.

 

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் வியூகத்தை கையில் எடுத்த ஸ்டாலின்! ஸ்டாலின் இறக்கிய கடைசி நேர வெடிகுண்டு...! இனிதான் வெடிப்பால் தெரியும் வெற்றி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விஜய் பிரசாரம் #மதுராந்தகம் Road Show #டிராக்டர் ஓட்டிய விஜய் #தேநீர் கடை விஜய் #DMK IT Wing
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story