×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ள அலறுனா எப்படி? நான் அரசியலுக்கு வந்ததுக்கு காரணமே இதுதான்..! உண்மையை அரங்கத்தில் உடைத்த விஜய்..!!

காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பில் விஜய் திமுக மீது கடும் விமர்சனம் செய்து, மக்களுக்கு சட்டப்பூர்வ நலன்கள் வழங்குவோம் என அரசியல் நோக்கத்தையும் இலட்சியத்தையும் வெளிப்படுத்தினார்.

Advertisement

தமிழக அரசியல் பரபரப்பை சூடுபடுத்தும் வகையில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அரசியல் விமர்சனம் மற்றும் மக்கள் நல வாக்குறுதி ஆகிய இரண்டையும் இணைத்து முக்கிய செய்தியாய்த் திகழ்ந்தது.

மக்களுக்கு நல்லது செய்வதே அரசியல் இலக்கு

நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், “எல்லாவற்றையும் நமக்கு கொடுத்த மக்கள் அனைவருக்கும் நல்லதை செய்ய வேண்டும். அதை சட்டப்பூர்வமாக, அங்கீகாரத்தோடும், அதிகாரப்பூர்வமாகவும் செய்ய வேண்டும். ஒரே மாதிரி செய்ய வேண்டும். ஒரே இலட்சியத்தோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: "பாலாறு மக்களின் உயிரோடும் ரத்ததோடும் கலந்த ஆறு" ! அரங்கம்மே அதிர்ந்த விஜய்யின் பேச்சு! விஜய் கூறிய வாக்குறுதிகள்!

திமுக மீது நேரடிக் குற்றச்சாட்டு

“உங்களை, என்னை, நம்மை எல்லோரையும் பொய் சொல்லி நம்ப வைத்து ஓட்டு போட வைத்து ஏமாற்றினாங்க. நல்லது செய்ற மாதிரி நாடகம் ஆடுறாங்க. அவர்களை நம்ம எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?” என கடுமையாக விமர்சித்தார்.

பாடல் மூலம் கலாய்த்த விஜய்

‘பவள விழா பாப்பா, நீ பாசாங்கு காட்டாதே பாப்பா’ என்று பாடி கலாய்த்ததாகவும், “பாப்பா என சாப்டா தான் விமர்சித்தேன்” எனவும் அவர் கூறினார். மேலும், “இன்னும் விமர்சிக்க ஆரம்பிக்கலையே… அடிக்கத்தான் ஆரம்பிக்கல. அதற்குள் அலறுனா எப்படி?” என கிண்டலடித்தார்.

விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் பங்கேற்பு

இந்த மக்கள் சந்திப்பில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட 2,000 பேர் பங்கேற்றிருந்தனர். பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்க வந்ததாக விஜய் கூறினார்.

திமுகவுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு

“தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நம்ம மேல வன்மம் இருக்கலாம்… ஆனா நமக்கு அது கிடையாது. ஆனா ஏமாத்தி ஆட்சிக்கு வந்தா, அத எப்டி கேள்வி கேட்காம இருப்பது?” என்று தெளிவுபடுத்தினார்.

அண்ணா–எம்ஜிஆர் மரபைப் பற்றிய பக்கம்

“நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். அண்ணா ஆரம்பிச்ச கட்சிய, அதற்குப் பிறகு கைப்பற்றியவர்கள் என்ன செய்கிறாங்க? எம்ஜிஆரின் ‘குறி வைத்தால் தவறாது’ என்ற பாடல் யாருக்கென்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்,” என்றார்.

காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பில் விஜய் வெளியிட்ட உரைகள், வரவிருக்கும் அரசியல் மாற்றத்தின் சத்தத்தை மேலும் தெளிவாக்கும் வகையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING : நாம ஆட்சிக்கு வந்தா.. வந்தா என்ன வருவோம்.. மக்கள் வர வைப்பாங்க! நடிப்பவர்களையும் நாடகம் ஆடுபவர்களையும் விட மாட்டோம்! விஜய் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vijay Speech #Kanchipuram Event #Tamil Politics #TVK Meeting #DMK criticism
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story