×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த அதிருப்தியால் தவெக அரசியல்கே ஆப்பு! அதிரடியாக களத்தில் இறங்கிய முதல்வர் விஜய்...! ஒரே மேடையில் ஆல் இன் ஆல் தலைவர்கள்... தமிழகத்தை அதிரவைக்கப்போகும் தவெகவின் மெகா பொதுக்கூட்டம்..!!!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு கூட்டணியில் ஏற்பட்ட அதிருப்தியை சரிசெய்ய விஜய் எடுத்துள்ள சமரச முயற்சிகள் கவனம் பெற்றுள்ளன.

Advertisement

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், மற்ற கூட்டணிக் கட்சிகளிடையேயும் அதிருப்தி குரல்கள் எழுந்தன. இதையடுத்து, கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் விஜய் நேரடியாக களமிறங்கியுள்ளார்.

வேட்பாளர் தேர்வு முதல் தேர்தல் பிரசாரம் வரை முக்கிய முடிவுகளில் கூட்டணிக் கட்சிகளிடம் போதிய ஆலோசனை நடத்தப்படவில்லை என்பதே அதிருப்திக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதும் கூட்டணிக்குள் பேசுபொருளானது.

இதையும் படிங்க: இப்படி ஒரு பிளானா..? லண்டனில் சந்தித்த விஜய் -அஜித்...! பின்னணியில் நடந்த மாபெரும் மாஸ்டர் பிளான்...!!!

கூட்டணிக் கட்சிகளிடம் எழுந்த அதிருப்தி

இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்த பிறகு, காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் தங்களது கருத்துகளை தலைமையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகளில் கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியமும் தவெக தலைமையிடம் வலியுறுத்தப்பட்டது.

கூட்டணிக்குள் இந்த அதிருப்தி நீடித்தால், இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் தவெக வேட்பாளர்களுக்கு முழுமையாகச் செல்லாமல் போகலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், திமுக தரப்பிலும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், கூட்டணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவது முக்கியமானதாக மாறியுள்ளது.

முக்கிய தலைவர்களை சந்திக்க விஜய் திட்டம்

இதையடுத்து கூட்டணியில் நிலவும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து பேச விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு. மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதுடன், சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இரு தொகுதிகளிலும் பிரசார கூட்டம்

தலைவர்களை சந்திப்பதுடன் நின்றுவிடாமல், தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’யின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் கூட்டணித் தலைவர்களுடன் இணைந்து பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயின் இந்த சமரச முயற்சியைத் தொடர்ந்து, கூட்டணி வெற்றிக்காக களப்பணியாற்ற விசிக தயாராக இருப்பதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனால் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக கூட்டணியில் ஏற்பட்டிருந்த அதிருப்தியை சமாளிக்கும் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

 

இதையும் படிங்க: அமைச்சரவையில் அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர்...! தவெக - வில் அடுத்த விக்கெட் அவுட்? பரபரக்கும் அரசியல் களம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விஜய் #தவெக #by election #கூட்டணி #மதுராந்தகம் தாராபுரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story