"தமிழகத்தில் கருத்தடை சிகிச்சைக்கு தடை.?" அமைச்சருக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை.!
தமிழகத்தில் கருத்தடை சிகிச்சைக்கு தடை.? அமைச்சருக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை.!
தமிழகத்தின் மொத்தக் கருவுறுதல் விகிதம் அபாயகரமான அளவில் இருப்பதாக விசிக எம்.பி. ரவிக்குமார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், விசிக எம்.பி. ரவிக்குமார், "சமீபத்தில் வெளியாகிய 2023-24ம் ஆண்டுக்கான NFHS-6 அறிக்கையில், 'இந்தியாவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் 2.0 ஆக இருக்கும் நிலையில் தமிழகத்தின் கருவுறுதல் விகிதம் 1.7 என்ற அளவில் இருப்பதாக உள்ளது.' இதன்படி, இது இனி வரும் நாட்களில் தமிழக மக்கள் தொகை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். ஆண்டாண்டுக்கு மக்கள் தொகை குறைந்துகொண்டே போகும்.
ஒரு பெண்ணிற்கு சுமார் 2.1 குழந்தைகள் என்ற விகிதமே (TFR) பொருத்தமாக இருக்கும். கருவுறும் வயதை அடைவதற்கு முன்பாக ஏற்படுகின்ற இறப்பு விகிதங்களையும் ஈடுகட்டி, ஒரு தாய் தனக்கும் தன் இணையருக்கும் ஈடுசெய்ய இந்த விகிதம் சரியானது.
இதையும் படிங்க: சற்றுமுன்... மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு..!!!
உத்தரப்பிரதேசத்தில் 2.2 ஆகவும் பீகாரில் 2.7 ஆகவும் தேசிய சராசரியைவிட மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வரும் காலத்திலும் மத்திய அரசின் நிதியை அவை அதிகமாகப் பெறும். மேலும், தொகுதி மறுசீரமைப்பிலும் அம்மாநிலங்களுக்குத்தான் கூடுதல் தொகுதிகள் கிடைக்கப்பெறும்.
மேலும், இந்த சரிவு இயற்கையாக வந்ததில்லை. பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் தான் இது ஏற்பட்டுள்ளது. கருத்தடை செய்து கொள்வோரின் விகிதம் இந்திய அளவில் 36.5 ஆக உள்ளது. அது தமிழகத்தில் 56.6 ஆகஇருக்கிறது. ஆண்கள் கருத்தடை செய்யும் விகிதம்கூட தேசிய அளவை விடத் தமிழகத்தில் 2 மடங்காக இருக்கின்றது.
இந்த சரிவைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 3வது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்க சலுகைகளை அறிவிப்பது மற்றும் கருத்தடை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை என செயல்பட வேண்டும் என வேண்டுகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களே.! கொஞ்சம் இதை கவனியுங்கள்.!