×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சோபா மாடல் அரசு... திமுக, அதிமுகவுக்கு விமர்சனத்திற்கு வன்னி அரசு கொடுத்த மரண மாஸ் பதிலடி..! நேரில் அழைத்து விஜய் செய்த காரியம்.. அதிர்ந்துபோன அரசியல் களம்..!!!

சோபா மாடல் அரசு என்ற விமர்சனத்திற்கு புதிய அரசியல் விளக்கம் அளித்த அமைச்சர் வன்னி அரசை, முதலமைச்சர் விஜய் நேரில் பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ள 'சோபா மாடல் அரசு' விவகாரத்திற்கு புதிய திருப்பம் கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் விமர்சனமாக பயன்படுத்திய அந்த வார்த்தையையே கொள்கை விளக்கமாக மாற்றிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசின் கருத்துக்கு, முதலமைச்சர் விஜய் நேரில் பாராட்டு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அப்போது கூட்டணித் தலைவர்களின் அலுவலகங்களுக்கு சொகுசு சோபாக்கள் அனுப்பப்பட்டதாக எழுந்த தகவலை முன்வைத்து, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போதைய ஆட்சியை 'சோபா மாடல் அரசு' என விமர்சித்து வந்தன.

இதையும் படிங்க: # சற்று முன்: எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை...! தவெகவில் அவர் உறுப்பினராக கூட இல்லை! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி.!!!

விமர்சனத்திற்கு வன்னி அரசு கொடுத்த விளக்கம்

சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அமைச்சர் வன்னி அரசு, 'ஆம், இது சோபா மாடல் அரசு தான்' என்று கூறி அதற்கான அரசியல் விளக்கத்தையும் அளித்தார். அவரது விளக்கப்படி, SOFA என்பதில் S - Social Justice (சமூக நீதி), O - Organised Action (ஒருங்கிணைந்த செயல்பாடு), F - Freedom (சுதந்திரம்), A - Anti-Corruption & Caste (ஊழல் மற்றும் சாதி எதிர்ப்பு) என்பதைக் குறிக்கிறது.

மேலும், முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரப்படுகின்றன என்றும், கொள்கை ரீதியாக வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்கான அணுகுமுறையில் தொடர்ச்சி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதல்வரின் நேரடி பாராட்டு

இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வன்னி அரசு முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது சமீபத்திய நேர்காணலை பார்த்ததாக கூறிய முதலமைச்சர், 'சோபா மாடல்' என்ற சொல்லுக்கு அமைச்சர் அளித்த விளக்கத்தை ரசித்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதோடு, சமூக நீதித்துறை சார்ந்த பணிகளை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் வைரலாகும் பதிவு

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் வன்னி அரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் தன்னை நேரில் பாராட்டியதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்ததுடன், தனது பணிகளை மேலும் சிறப்பாக தொடர ஊக்கமளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனமாக தொடங்கிய ஒரு வார்த்தையை, அரசியல் தத்துவம் கொண்ட முழக்கமாக மாற்றிய அமைச்சர் வன்னி அரசின் அணுகுமுறையும், அதற்கு முதலமைச்சர் விஜய் தெரிவித்த பாராட்டும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: BREAKING: திடீர் திருப்பம்.... தவெகவில் இணையவில்லை..! நேரடி சந்திப்பில் சொன்ன அந்த வார்த்தை.... பதற்றத்தில் இருந்த எடப்பாடி இப்போ செம குஷியில்..!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK Government #Vanni Arasu #SOFA Model #Chief Minister Vijay #Tamil Nadu Politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story