×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பழைய நினைவுகளை பகிர்ந்த தருணம்! உங்களுக்கு அப்போ 9 வயசு....சின்ன பிள்ளை! விஜய் - வைகோ சந்திப்பில் நடந்த சுவாரஸ்ய காட்சி!!!

தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்த வைகோ, சிறுவயது நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சியூட்டினார். வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது.

Advertisement

தமிழக முதலமைச்சர் விஜய்யை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னைில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசப்பட்ட இந்தச் சந்திப்பில், இருவரும் பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டது கவனம் பெற்றது. குறிப்பாக விஜயின் சிறுவயது சம்பவம் ஒன்றை வைகோ நினைவுகூர்ந்தது சந்திப்பை நெகிழ்ச்சியாக மாற்றியது.

சிறுவயது நினைவுகளை பகிர்ந்த வைகோ

சந்திப்பின் போது பேசிய வைகோ, “உங்களுக்கு 9 வயதாக இருந்தபோது உங்கள் புதிய வீட்டிற்கு நானும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரும் நேரில் வந்தோம்” என்று கூறினார். இதைக் கேட்ட முதலமைச்சர் விஜய் சில நொடிகள் அமைதியாக இருந்து பழைய நினைவுகளை நினைத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த காலத்தில் நடந்த சந்திப்புகள், குடும்ப உறவுகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் இருவரும் சிரித்தபடி பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மேடையிலேயே பெண்களிடம் அந்த விஷயத்தில் வீட்டுக்காரரை நம்பாதீங்கன்னு சொன்ன ஸ்டாலின்! 8000 + 8000... திமுகவுக்கு ஓட்டு! ஸ்டாலின் அடித்த அசால்ட்டான கமெண்ட்.. குலுங்கி குலுங்கிச் சிரித்த பெண்களின் வீடியோ!!!

வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை

இதையடுத்து, தமிழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை நடைபெற்றது. மாநில வளர்ச்சிக்கு தேவையான சில கருத்துகளை வைகோ பகிர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலைத் தாண்டி மனிதநேயத்துடன் நடந்த இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: இந்த அன்பு வேற யாருக்கும் கிடைச்சது இல்ல! அண்ணன்கள் பட்டியலில் உள்ள முதல் பெயரை பாருங்க... வைரலாகும் அந்த பத்திரிக்கை புகைப்படம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #vaiko #தமிழக அரசியல் #CM Vijay Meeting #முதலமைச்சர் விஜய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story