×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'ஆக்ரோஷமாக வந்தாலும், அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது' - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

'ஆக்ரோஷமாக வந்தாலும், அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது' - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

Advertisement

ந்தி திணிப்பு குறித்து பலர் பல தருணங்களில் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் திமுக தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறது. தற்போது இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் :-

"இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் 
அமித் ஷா- வின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது. 

தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை “Local Language" என்று சுருக்குவது ,பா.ஜ.கவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். 

ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள், இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Amit Sha #Udhyanithi stalin #Tamil Spark News #dmk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story