×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேரவையில் பேசமுடியல... வீட்டுக்குப் போய் அறிக்கை விடுறீங்களே.? பதவி வெறியோடு தினமும் அட்டனன்ஸ் போட்டு ஆளுநர் மாளிகைக்கு நாங்க போகல..! CM விஜய்- உதயநிதி வார்த்தை போர்... எக்ஸ் தளத்தில் உச்சக்கட்ட மோதல்!!!

முதலமைச்சர் விஜயின் எக்ஸ் பதிவு அரசியல் சூட்டைக் கிளப்பிய நிலையில், உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கடும் பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழக அரசியலில் சமூக வலைதளங்கள் மீண்டும் கடும் விவாத மேடையாக மாறியுள்ளன. முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சித்து வெளியிட்ட எக்ஸ் பதிவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாகவும் கடுமையாகவும் பதிலளித்துள்ளார். இரு தரப்பினரின் வார்த்தைப் போர் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் பதிலளிக்காமல் வெளியே சென்று அறிக்கை வெளியிடும் முதலமைச்சர் என விஜயை சாடிய உதயநிதி, “பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பதவி ஆசையால் ஆளுநர் மாளிகைக்கு தினமும் செல்லவில்லை. மக்கள் தீர்ப்பை மதித்துதான் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய்க்கு ஆப்பு வைத்தவரே அவர் தானா....? பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்! பின்னணியில் 'அந்த ' ஆள்பவர் ' யார்?..!!!

‘மக்கள் வாக்கால் தான் இன்று முதல்வர்’

இதையடுத்து, “நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றால், அதே மக்களின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் இன்று முதலமைச்சராக இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட்டீர்களா?” என்று விஜயை நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். ‘சிஎம் சார்’ என குறிப்பிட்டு வெளியிட்ட இந்த வரிகள் அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளன.

தகவலின்படி, இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது. திமுக மற்றும் தவெக ஆதரவாளர்கள் இடையே கடும் விவாதங்களும் தொடங்கியுள்ளன.

2006 ஆட்சி குறித்து பதிலடி

2006-ம் ஆண்டு திமுக ஆட்சியை விஜய் விமர்சித்ததற்கும் உதயநிதி பதில் அளித்துள்ளார். “அந்த ஆட்சி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களை கடன் வாங்கியோ, குதிரை பேரத்தில் வாங்கியோ அமைக்கப்பட்ட அரசு அல்ல. கூட்டணிக் கட்சிகளின் வெளிப்படையான ஆதரவுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி” என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின், “2026 தேர்தலில் திமுக தோற்றிருக்கலாம். ஆனால் திராவிட மாடல் ஆட்சித் திட்டங்கள் தொடரும் என்று உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததே எங்களுடைய முதல் வெற்றி” என்ற வரிகளையும் அவர் பதிவில் சேர்த்துள்ளார்.

அரசியல் களம் சூடுபிடிப்பு

விஜயின் ஆரம்ப பதிவும், அதற்கு உதயநிதி அளித்துள்ள பதிலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருவதால், தவெக – திமுக இடையிலான அரசியல் மோதல் அடுத்த கட்டத்திற்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: 10 லட்சம் கோடி கடன்! எதாச்சும் சொல்லி சமாளிக்காதீங்க முதல்வர் விஜய்யே... ஆட்சியை ஆக்கபூர்வமாக நடத்துவது எப்படின்னு பாருங்க! தங்கம் தென்னரசு காட்டம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Udhayanidhi stalin #CM Vijay #திமுக #TVK Politics #Tamil Nadu Politics
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story