10 நிமிஷம் டைம் கொடுங்க சார்! கெஞ்சிய உதயநிதி ஸ்டாலின் மனைவி....! கைதில் அதிரடி காட்டிய போலீசார்!!!
நீலாங்கரையில் உதயநிதி ஸ்டாலினின் இல்லம் முன்பு போலீசார் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே நீடித்த பரபரப்பு. கைது நடவடிக்கையை முன்னிட்டு நடந்த பேச்சுவார்த்தை பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு நள்ளிரவு முதல் நீடித்த பதற்றம், இன்று காலையிலும் தொடர்ந்தது. காவிரி உரிமைப் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைது நடவடிக்கைக்காக போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், திமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இல்லத்தை முற்றுகையிட்ட போலீசார்
தகவலின்படி, சென்னை காவல் துறை இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் நீலாங்கரையில் உள்ள இல்லத்தை முற்றுகையிட்டனர். கைது நடவடிக்கைக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற வாரண்டை காட்டாமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று திமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வலியுறுத்தி, போலீசாரை நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிங்க: என்ன பேச்சு பேசுற? உதயநிதி பேச்சுக்கு ஆப்பு வைத்த முதல்வர் விஜய்! தமிழக அரசியலில் வெடித்த வெடிகுண்டு...!!!
கிருத்திகா உதயநிதி - போலீஸ் அதிகாரி இடையே பேச்சுவார்த்தை
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இணை ஆணையர் விஜயகுமாருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உதயநிதிக்கு 10 நிமிடங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டிருப்பதால் மனிதாபிமான அடிப்படையிலாவது கால அவகாசம் வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
கைது நடவடிக்கையில் போலீசார் உறுதி
ஆனால், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததாக கூறப்படும் இணை ஆணையர் விஜயகுமார், கைது நடவடிக்கை முறைப்படி நிறைவேறும் வரை போலீசார் அங்கிருந்து நகரமாட்டார்கள் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இல்ல வளாகத்தில் போலீசாருக்கும் திமுக தரப்பினருக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரபரப்பான சூழல் நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: BREAKING: திமுக- வை தன் வசப்படுத்தும் உதயநிதி ஸ்டாலின்! அடுத்தகக்கட்ட பதவி உயர்வு... கனிமொழியுடன் அவசர ஆலோசனை..!!!