×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சட்டசபையில நாளைக்கு தான் சம்பவமே இருக்கு! பதில் சொல்ல ரெடியா இருங்க விஜய்..... விளாசி தள்ளிய எதிர்க்கட்சித் தலைவர்.!!!

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்களும் விவசாயிகளுக்கான தீர்வுகளும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம்சாட்டினார். மேகதாது, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய திட்டங்களோ, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் அறிவிப்புகளோ பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வேளாண் பட்ஜெட்டுக்கு கடும் விமர்சனம்

செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, இந்த அறிக்கையை வேளாண் பட்ஜெட் என்று கூறுவதை விட, முதலமைச்சரை பாராட்டும் நோக்கில் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகவே பார்க்க வேண்டிய நிலை இருப்பதாக விமர்சித்தார். ஆட்சி பொறுப்பேற்ற கடந்த மூன்று மாதங்களில் விவசாயிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீண்டும்... மீண்டும்.... "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர் "..! திருச்சி ஏர்போர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு ...!!!

பயிர்க்கடன், மேகதாது விவகாரங்களில் கேள்வி

முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து மீண்டும் அறிவிப்பதைத் தவிர புதிய முயற்சிகள் எதுவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும், ரூ.50 ஆயிரம், பின்னர் ரூ.75 ஆயிரம் என அறிவிப்புகள் மாற்றப்பட்டாலும், முழு கடன் தள்ளுபடி குறித்து அரசு தெளிவான முடிவை அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.

மேகதாது அணை விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமையை உறுதியாக வலியுறுத்த வேண்டிய நேரத்தில் அரசு அமைதியாக இருப்பதாக அவர் விமர்சித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானம்

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து விவாதிக்க நாளை சட்டப்பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளதாக உதயநிதி தெரிவித்தார். அந்தத் தீர்மானத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், பேரவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: இது நடக்க வைக்கத்தான் இவ்வளவு நாடகமா? தவெக-வின் மூன்று கட்ட அரசியல் திரைக்கதையை அவிழ்த்த திமுக MP அப்துல்லா...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Udhayanidhi stalin #வேளாண் பட்ஜெட் #Tamil Nadu Assembly #மேகதாது #Farm Loan Waiver
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story