×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவையில் என்ன நடக்குது? இது என்ன மரபு.... நாங்க வீட்டுக்கு போய் TV பார்த்தா ஒரு அமைச்சர் இன்னமும் பேசுறாரு..! கராறாக கேள்வி கேட்ட உதயநிதியின் வீடியோ..!!!

சட்டசபையில் டாஸ்மாக் நிதி குறித்த முதலமைச்சர் விஜயின் குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தின் போது டாஸ்மாக் நிதி தொடர்பாக முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டு அவையில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக விளக்கம் கேட்டு சவால் விடுத்ததால் சில நேரம் அவையில் பரபரப்பான சூழல் நிலவியது.

டாஸ்மாக் நிதி குற்றச்சாட்டால் அமளி

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர், டாஸ்மாக் வருவாயில் இருந்து ஒரு குறிப்பிட்ட கட்சியின் தனிப்பட்ட நிதிக்கு பணம் சென்றதாக குற்றம் சாட்டினார். இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், எந்தக் கட்சியை குறிக்கிறார் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: சட்டமன்றத்தில் பொறுமையை இழந்து ருத்ரதாண்டவம் காட்டிய CM ..! "Evils evils என்று Devils பேசக் கூடாது"... முதல்வர் விஜய்யின் தரமான சைகையை பார்த்து ஷாக்கான திமுக..!!!

மேலும், பொதுவான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக ஆதாரங்களுடன் நேரடியாக பேச வேண்டும் என்றும், எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு

அவையில் தொடர்ந்து வாக்குவாதம் நீடித்த நிலையில், தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டன.

அவை நடைமுறைகள் குறித்த கேள்வி

வெளிநடப்புக்கு முன்பு பேசிய உதயநிதி ஸ்டாலின், முந்தைய நாள் நடந்த அவை நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். நேற்று தாம் பேசியபோது அவை முடிந்துவிட்டதாக சபாநாயகர் தெரிவித்ததாகவும், பின்னர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்தபோது ஒரு அமைச்சர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை கண்டதாகவும் குறிப்பிட்டார்.

அதன்பின், இது எந்த வகையான அவை மரபு என்று கேள்வி எழுப்பிய அவர், சட்டமன்ற நடைமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் சட்டசபை கூட்டத்தில் அரசியல் சூடு மேலும் அதிகரித்தது.

 

இதையும் படிங்க: சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை....! திமுகவினர் கடும் அமளி.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Udhayanidhi stalin #CM Vijay #TASMAC Fund #Tamil Nadu Assembly #DMK Walkout
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story