வீடு தேடி வாக்கு கேட்க சென்ற தவெக பெண் நிர்வாகியை செருப்பால் வீசி, கம்பியால் அடித்த போதை ஆசாமி! அறை நிர்வாணமாய் நின்று செய்த அட்டூழிய வீடியோ காட்சி!!!
திருச்சி கே.கே.நகரில் தேர்தல் பரப்புரையின்போது தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடந்தது. பெண் நிர்வாகி காயம் அடைந்த நிலையில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சியில் தேர்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கே.கே.நகரில் நடந்த இந்தச் சம்பவத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பெண் நிர்வாகி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வாக்கு சேகரிப்பில் ஏற்பட்ட மோதல்
தகவலின்படி, புதன்கிழமை இரவு கே.கே.நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த 60 வயது முதியவர் ஒருவர், போதை நிலையில் பெண் நிர்வாகிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியதுடன், செருப்பை எறிந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அருகில் இருந்த கட்டையை எடுத்துக் கொண்டு வீசியதில், ஒரு பெண் நிர்வாகி காயமடைந்தார். சம்பவத்தின் போது அந்த நபர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசியதாக தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: ஓட்டு கேட்டு வந்த திமுகவை தெறித்து ஓடவிட்ட குழந்தை! இங்க வராதீங்க.... எங்க ஓட்டு TVK க்கு தான்....! சிறுமியின் துணிச்சலான வீடியோ!!!
வைரலாகும் வீடியோ காட்சிகள்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், மேல் சட்டை இன்றி வீட்டின் கதவுக்குப் பின்னால் நின்ற முதியவர், கட்சித் தொண்டர்களை நோக்கி ஆவேசமாகக் கத்துவதும், கையில் இருந்த கட்டையை வீசி அடிக்க முயல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
அவருடன் இருந்த பெண்மணி தடுக்க முயன்றபோதும், அவர் தொடர்ந்து அநாகரிகமாகப் பேசி மிரட்டல் விடுத்தது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அரசியல் சூழலில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசில் புகார் – விசாரணை கோரிக்கை
இதையடுத்து, தவெக நிர்வாகிகள் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், இரவு நேரத்தில் முதியவர்களை அழைத்து வர முடியாது என போலீசார் தெரிவித்ததால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தச் சம்பவம் திருச்சியில் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பரபரப்பான ரோடு ஷோவில் எதிர்பாரத விபத்தில்.... பதறி கீழே இறங்கி விஜய் செய்த செயல்! திருச்சியில் வேட்புமனு தாக்கலின் போது நடந்த காட்சி!!!