BREAKING: ஆட்சியை பிடிக்க விஜய்யின் அடுத்த திட்டம்.... உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. வழக்கு.!!!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால், த.வெ.க உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் மேலும் பரபரப்பாகியுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.கவுக்கு இன்னும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சட்டரீதியான நடவடிக்கைக்கு அக்கட்சித் தலைமை தயாராகி வருகிறது.
உச்ச நீதிமன்றத்தை நாடும் த.வெ.க
தகவலின்படி, ஆளுநரின் முடிவுக்காக மேலும் காத்திருக்காமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுக த.வெ.க முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் மிகப்பெரிய கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு வழங்கப்படாதது அரசியல் மற்றும் சட்ட ரீதியாக கேள்விகளை எழுப்பியுள்ளதாக கட்சித் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #சற்றுமுன் : விஜய் - காங்கிரஸ் கூட்டணி..... தவெகவுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு அறிவித்த காங்கிரஸ்...!!!
இதனால், விரைவில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி மனுத் தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்.ஆர்.பொம்மை தீர்ப்பை முன்வைக்கும் திட்டம்
இந்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மை தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து வாதாட த.வெ.க சட்டக்குழு திட்டமிட்டுள்ளது. மாநில ஆட்சிகள் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த அந்த தீர்ப்பு, இந்த விவகாரத்தில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகப்பெரிய கட்சிக்கு முதலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே ஆளுநர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரங்களில் அதிகரிக்கும் விவாதம்
இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி அமைப்புகள் மற்றும் ஆட்சியமைப்பு தொடர்பான கணக்குகள் பேசப்பட்டு வரும் நிலையில், த.வெ.க எடுத்துள்ள இந்த சட்ட நடவடிக்கை அரசியல் களத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.