முக்கிய பொறுப்புகளால் தவெக- வில் நடக்கும் தள்ளுமுள்ளு! விஜய் எடுத்த அதிரடி முடிவால்... கட்சி வட்டாரத்தில் பரபரப்பு!!!
தவெகவில் மாற்றுக்கட்சியிலிருந்து இணைந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால், StartupTN பதவி விவகாரம் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவில் மாற்றுக்கட்சிகளில் இருந்து சமீபத்தில் இணைந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, கட்சியின் ஆரம்பகால நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் StartupTN முதன்மை நிர்வாக அதிகாரி பதவிக்கான நியமனமும் கட்சிக்குள் பேசுபொருளாகியுள்ளது.
முக்கிய பொறுப்புகள் குறித்து அதிருப்தி?
தவெக தொடங்கிய காலம் முதல் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற கருத்து சிலரிடம் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், பிற கட்சிகளில் இருந்து தவெகவுக்கு வந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: BREAKING: கூட்டணி குறித்து திட்டவட்டமாக அறிவித்த திருமாவளவன்! பரபரக்கும் அரசியல் களம்!!!
இந்த சூழலில், தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான StartupTN நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பதவிக்கான போட்டியும் கவனம் பெற்றுள்ளது. அந்தப் பதவியில் யாரை நியமிப்பது என்பது தொடர்பாக தவெக வட்டாரத்தில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கை ராமச்சந்திரன் பெயரால் பரபரப்பு
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனை StartupTN-ன் தலைமைப் பொறுப்பில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில், கட்சி வட்டாரத்தில் அதுகுறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாற்றுக்கட்சியிலிருந்து வந்த ஒருவருக்கு அரசின் முக்கிய தொழில் அமைப்பின் தலைமைப் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல், தவெக நிர்வாகிகளிடையே மேலும் பேசுபொருளாகியுள்ளது. சிங்கை ராமச்சந்திரன் பெயர் தொடர்பான இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சி வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.