BREAKING : எடப்பாடிக்கு தரமான பதிலடி கொடுத்த தவெக! தொடர் தேர்தல் தோல்வி... பலவீனமான தலைமையில் இனி பணிபுரிந்தும் பலனில்லை! இப்படிதான் இருக்கும் அரசியல் எதிர்காலம்..!!!
அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த விவகாரத்தில் இபிஎஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக வெற்றிக் கழகம் விளக்கமளித்து கடும் பதிலடி கொடுத்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தவெக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, “குதிரை பேரம்” நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி முன்வைத்த நிலையில், அதற்கு தற்போது தவெக தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் விலகல்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமாரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்த இணைப்புகள் அனைத்தும் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையா அல்லது அதிமுக உள்கட்சிப் பிரச்சினைகளின் வெளிப்பாடா என்ற விவாதமும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் கோட்டையை உடைத்த எடப்பாடி! அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்.! முழு வீச்சில் சூடு பிடிக்கும் அரசியல் களம்!
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு தவெக பதில்
இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் விளக்கக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், “தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை சந்தித்து வரும் பலவீனமான தலைமை, தனது தோல்விகளை மறைப்பதற்காக தமிழ்நாடு அரசும் தமிழக வெற்றிக் கழகமும் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சுய விருப்பத்தின் பேரில் இணைந்தனர்’
மேலும், அதிமுகவில் உள்ள தற்போதைய மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கே எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது நம்பிக்கை இல்லை என்றும், அதனால் தான் பலர் மாற்று அரசியல் பாதையை தேர்வு செய்கிறார்கள் என்றும் தவெக குறிப்பிட்டுள்ளது.
அதன்பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அரசியல் எதிர்காலம் மற்றும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் தவெகவில் இணைந்துள்ளனர். இதில் எந்த கட்டாயமும் இல்லை. குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிருப்தி....கூண்டோடு மொத்தமாக அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்! மகிழ்ச்சியில் துள்ளும் எடப்பாடி!!!