தவெக-வின் ரகசிய 'பிளான் பி '...எடப்பாடி தொகுதியில் விஜய் செய்த அந்த ஒரு காரியம்! அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!!
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளருக்கு விஜய் ஆதரவு வழங்கும் ‘பிளான் பி’ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடப்பாடி தொகுதியில் அரசியல் சூழல் திடீரென மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு தொழில்நுட்ப காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அக்கட்சியில் அதிருப்தி நிலவிய நிலையில், புதிய அரசியல் உத்தியை விஜய் கையில் எடுத்துள்ளார்.
வேட்புமனு நிராகரிப்பு… அடுத்து என்ன?
எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் இந்த முக்கியத் தொகுதியில் தவெக சார்பில் நேரடி போட்டி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. தகவலின்படி, ஆவணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக அருண்குமாரின் மனு ஏற்கப்படவில்லை. இதனால் கட்சித் தொண்டர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது.
‘பிளான் பி’யுடன் விஜய் நகர்வு
இந்த நிலையை மாற்றுவதற்காகவே விஜய் ‘பிளான் பி’ எனும் மாற்று யோசனையை செயல்படுத்தியுள்ளார். தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பிரேம்குமார் என்பவருக்கு முழு ஆதரவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவுக்கு நேரடி சவாலை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: செம குஷியில் எடப்பாடி! அதிமுக கூட்டணியில் இணையும் கட்சி! அதிகரிக்கும் அதிமுக வின் பலம்!
தொண்டர்களுக்கு நேரடி உத்தரவு
தகவலின்படி, எடப்பாடி தொகுதி முழுவதும் தவெக தொண்டர்கள் பிரேம்குமாருக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய் அவருடன் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் அரசியல் நகர்வு அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொகுதியின் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தைலாபுரத்தில் பேசிய ரகசிய டீல்.... சசிகலா - ராமதாஸ் உருவெடுக்கும் புதிய அலை! தமிழக அரசியலில் உருவாகும் மெகா கூட்டணி.... அதிரும் அரசியல் களம்!!!