வேலை ஒழுங்கா நடக்கணும்! கட்சி பெயருக்கோ இல்ல தலைவர் விஜய் பெயருக்கோ கலங்கம் வந்தா சும்மா விடமாட்டேன்.... ஒப்பந்தகாரர்களை ஸ்பாட்டிலேயே வறுத்தெடுத்த தவெக MLA சரத்குமார்...!!!
தாம்பரம் தொகுதியில் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த தவெக MLA ஆர்.சரத்குமார், தரக்குறைவு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
தாம்பரம் தொகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை, தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆர். சரத்குமார் திடீரென நேரில் ஆய்வு செய்தார். பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் நேரடியாக விளக்கம் கேட்ட அவர், தரக்குறைவு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந்த ஆய்வின் போது பேசிய சரத்குமார், மக்களின் பயன்பாட்டுக்காக செய்யப்படும் பணிகளில் எந்தவித அலட்சியமும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். அதேசமயம், தனது கட்சியின் பெயருக்கும் தலைவர் விஜய் பெயருக்கும் எந்த குறையும் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒப்பந்ததாரர்களுக்கு நேரடி எச்சரிக்கை
பணிகள் நடைபெறும் இடத்திலேயே ஒப்பந்ததாரர்களை சந்தித்த சரத்குமார், “கால்வாய் அமைக்கும் பணியில் முறைகேடோ, தரக்குறைவோ இருக்கக் கூடாது. ஒழுங்காகவும் தரமான முறையிலும் வேலை முடித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். தப்பு நடந்தா ஆக்ஷன் வேற மாதிரி இருக்கும்” என்று கடுமையாக எச்சரித்தார்.
இதையும் படிங்க: வேற லெவல்.... பெரம்பூரை தனது கோட்டையாக மாற்றிய விஜய்! பெண்களுடன் அமர்ந்து அழகாக விசில் கோலம் போட்ட தவெக தலைவர்! தீயாய் பரவும் வீடியோ!!!
அவரது இந்த பேச்சு அங்கு இருந்த அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. குறிப்பாக பணிகள் வேகமாகவும் தரமாகவும் நடைபெற வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சோசியல் மீடியாவில் வைரலான வீடியோ
ஆய்வின்போது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சரத்குமார் பேசிய விதமும், நேரடியாக எச்சரித்த அணுகுமுறையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தவெக ஆதரவாளர்கள் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வரும் நிலையில், “மக்கள் பணிகளில் சமரசம் இல்லை” என்ற கருத்துகளும் இணையத்தில் பதிவாகி வருகின்றன.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் சொல்லி தான் வேலை நடக்குது! சொன்னதைச் செய்த தவெக அமைச்சர் டி.கே.பிரபு.... மகிழ்ச்சியில் கொண்டாடும் கிராம மக்கள்!!!