×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BREAKING: அமைச்சரின் தந்தைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. சொன்னதை செய்த தவெக ஆட்சியாளர்கள்..! பக்கா மாஸ் சம்பவம்.!

Minister Madan Raja: சிறுகுறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா தந்தைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

தவெக அமைச்சர் மதன் ராஜாவின் தந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வரதன் மதன் ராஜா. இவர் தமிழ்நாடு அமைச்சரவையில், சிறுகுறு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரின் தந்தைக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிறந்த குழந்தையை பார்க்க 500.. அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்.!

தந்தைக்கு உடல்நலக்குறைவு:

இதனையடுத்து, உடனடியாக மதன் ராஜாவின் தந்தையை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இரவில் இருந்து தந்தையுடன் இருந்து சிகிச்சையை கவனித்துக்கொண்டுள்ளார். 

அறிவுறுத்தல்:

தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தி இருந்த நிலையில், அதன் பேரில் மதன் ராஜா செயல்பட்டு இருக்கிறார். 

தரம் மேம்படும்:

அமைச்சர்கள், அவர்களின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பட்சத்தில், அங்கு சிகிச்சை மற்றும் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தந்தைக்கு உதவியாக இருக்க மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு அமைச்சர் மதன் ராஜா அரசுப்பணிகளை கவனிக்க காலை புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதையும் படிங்க: #சற்று முன் : நகைச்சுவை நடிகர் முத்துக்காளை மனைவி மாலதி உயிரிழந்தார்! கண் கலங்க வைக்கும் காட்சி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TVK #TN politics #Nellai Govt Hospital #மதன் ராஜா #அரசு மருத்துவமனை சிகிச்சை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story