மானம், சூடு, சொரணை எல்லாம் பார்க்காதீங்க... 3,000 இல்ல 30,000 கொடுத்தாலும் வாங்குங்க! ஆனால் ஓட்டு மட்டும்.... TVK லயோலா மணியின் வைரல் பேச்சு வீடியோ!
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி லயோலா மணி பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. வரிப்பணம், வாக்கு அரசியல் குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு பரபரப்பான விவாதம் வெடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் லயோலா மணி சமீபத்தில் ஆற்றிய உரை, சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
வரிப்பணம் குறித்து லயோலா மணி பேச்சு
அந்த கூட்டத்தில் பேசிய லயோலா மணி, திமுக அரசு வழங்கும் நலத்திட்ட பணம் அரசின் சொந்தக் காசு அல்ல என்றும், அது மக்கள் செலுத்திய வரிப்பணம் தான் என்றும் கூறினார். எனவே அரசு தரும் உதவித் தொகையை எவ்வித தயக்கமுமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அது 30,000 ரூபாயாக இருந்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் அவர் பேசினார். உங்கள் சொந்தப் பணத்தை திரும்பப் பெறுவதில் தவறு இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
சினிமாவுக்குச் செலவிடுங்கள் என்ற சர்ச்சை
மேலும், அந்தப் பணத்தை குடும்ப தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், 'ஜன நாயகன்' போன்ற திரைப்படங்களுக்கு சென்று செலவிடுங்கள் என்றும் அவர் கூறியது கூடுதல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆனால், ஓட்டுப் போடும் போது மட்டும் தமிழக வெற்றிக் கழகத்திற்கே வாக்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வேற லெவல் காட்சி! உதயநிதி சொன்ன அந்த ஒரு வார்த்தை! மூன்று அமைச்சர்கள் மூஞ்சிலயும் ஈ ஆடல...அதோடு முதல்வர்...... வயிறு குலுங்க சிரிக்கும் வீடியோ!
நெட்டிசன்கள் எழுப்பும் கேள்விகள்
இந்த உரையைத் தொடர்ந்து, மக்கள் வரிப்பணத்தை சினிமாவுக்குச் செலவிடச் சொல்வது சரியா? மேலும், பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கத் தூண்டும் வகையிலான பேச்சு ஆரோக்கியமான அரசியல் தானா? என்ற கேள்விகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர். பலரும் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்களின் பேச்சு சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது என்பதால், பொறுப்புடன் பேச வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்று வருகிறது. லயோலா மணி உரை தொடர்பான விவாதம் இன்னும் சில நாட்கள் அரசியல் வட்டாரங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.