பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இரண்டாவது மாநில மாநாடு.! எங்கு? எப்பொழுது?? தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு!!
பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இரண்டாவது மாநில மாநாடு.! எங்கு? எப்பொழுது?? தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் விஜய், அரசியலில் காலடி பதித்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தவெக கட்சி துவங்கி ஒரு வருடமே ஆனாலும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. இந்த நிலையில் தவெக கட்சியின் தலைவரான விஜய் தற்போது தனது இரண்டாவது மாநில மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் தற்போது மதுரையில் இரண்டாவது மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அதற்காக இன்று பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டு இதர பணிகளை துவங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: தாம்பரம் ரயில் நிலையத்தில் திடீரென இன்ஜின் பெட்டி மீது ஏறிய இளம்பெண்! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்! சென்னையில் பரபரப்பு...
இதையும் படிங்க: Breaking: ஹாப்பி நியூஸ்! 5% ஊதிய உயர்வு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!