அவர் எப்படி இந்த இடத்துக்கு வரலாம்..... பலே திட்டம் போட்டு தூக்கிய மூவர்! முதல்வர் விஜய்க்கு அரங்கேறிய அரசியல் சதி...!!!
முதல்வர் விஜய்யின் நெருக்கமான நியமனங்களைச் சுற்றி தவெக ஆட்சிக்குள் அதிகார மோதல் வெடித்துள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தைச் சுற்றி புதிய அதிகார மையங்கள் உருவாகி வருவதாக கோட்டை வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஜோதிடர் ரத்தன் பண்டிட் ஓ.எஸ்.டி. பதவிக்கு நியமிக்கப்பட்ட விவகாரம், தவெக ஆட்சிக்குள் ஏற்கனவே நிலவி வந்த உள்கட்சி அதிகாரப் போட்டியை வெளிப்படையாக காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும், அதிகாரிகள் மத்தியிலும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்து வந்த நியமனங்கள்
முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில், அவரது நெருக்கமானவர்களாக கருதப்படும் ரத்தன் பண்டிட் ஓ.எஸ்.டி. பதவிக்கும், ஜான் ஆரோக்கிய சாமி அரசியல் ஆலோசகராகவும், தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி பொது நிகழ்வுகளின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: BREAKING! விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு CM வழங்கிய அதிரடி அரசு பதவி.!!!
தகவலின்படி, அரசு நிர்வாகத்தில் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்த விரும்பிய ஜான் ஆரோக்கிய சாமி, விஷ்ணு ரெட்டி மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு, ஜோதிடரின் நியமனம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முதலமைச்சரின் நெருக்க வட்டாரத்தில் ரத்தன் பண்டிட்டின் செல்வாக்கு அதிகரித்தால் தங்களின் முக்கியத்துவம் குறையும் என்ற அச்சம் அந்த அணியில் இருந்ததாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘ஜோதிடர் நியமனம்’ சர்ச்சையாக மாறியது எப்படி?
ரத்தன் பண்டிட்டின் நியமன உத்தரவு மட்டுமே முதலில் வெளியே கசிய்ந்த நிலையில், அதை அரசியல் விவாதமாக மாற்ற சிலர் திட்டமிட்டு செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்த சமூக ஊடக இன்ஃப்ளுயன்சர்கள் மற்றும் ஊடக வட்டாரங்கள் மூலம் “அரசு நிர்வாகத்தில் ஜோதிடருக்கு என்ன வேலை?” என்ற கேள்வி தீவிரமாக முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு சட்டமன்றம் வரை கொண்டு சென்றன. அரசின் செயல்பாடுகளில் மூடநம்பிக்கை ஊக்குவிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்தது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக, ரத்தன் பண்டிட் நியமன உத்தரவை முதலமைச்சர் விஜய் ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகின.
கோட்டை வட்டாரங்களில் தொடரும் விவாதம்
கடந்த வாரம் தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில், குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மதிய உணவு இடைவேளைகளில் இந்த விவகாரம் முக்கிய பேச்சுப் பொருளாக மாறியதாக கூறப்படுகிறது. வெளிப்படையாக இது எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்பட்டாலும், அதிகார வட்டாரங்களில் வேறு மாதிரியான கருத்துகளும் நிலவுகின்றன.
முதல்வர் விஜய் இன்னும் ரத்தன் பண்டிட் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசியல் சூழ்நிலையை சமாளிக்க எடுத்த தற்காலிக முடிவு மட்டுமே என்றும் கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விசில் பறக்கப்படும் விசிக கட்சி! கோட்டையை அதிரவைத்த திருமாவளவன் ஒற்றை வார்த்தை.! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு...!!!