அடுத்தடுத்த அதிர்ச்சி! தவெக-வை உலுக்கும் போதைப்பொருள் விவகாரம்..! உளவுத்துறையின் ரகசிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் முதல்வர் விஜய்..!!!
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக முன்னாள் நிர்வாகி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளின் பின்னணியைச் சரிபார்ப்பது குறித்த உளவுத்துறை எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக முன்னாள் நிர்வாகி ஒருவர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகளின் பின்னணியைச் சரிபார்ப்பது தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிர்வாகிகளின் பின்னணி குறித்து உளவுத்துறை அறிக்கை
தலைமைச் செயலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவலின்படி, கட்சி நிர்வாகிகளின் பின்னணி குறித்து உளவுத்துறை சமர்ப்பித்த ரகசிய அறிக்கை முதலமைச்சர் விஜய்யின் கவனத்துக்குச் சென்றுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்குவதற்கு முன்பு அவர்களின் பின்னணியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா? தவெகவில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளி...! திருப்பூரில் மாறும் அரசியல் கணக்கு..!!!
குற்றப் பின்னணி கொண்டவர்களை அடையாளம் காண எச்சரிக்கை
கட்சியில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஊடுருவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விவகாரங்கள் தொடர்ந்தால் கட்சிக்கும் அரசுக்கும் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அறிக்கையின் முழு விவரங்களோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகிகள் குறித்த தகவல்களோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தவெக தலைமை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
இந்த விவகாரத்தில் தவெக தலைமை எத்தகைய நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது. நிர்வாகிகளின் பின்னணியைச் சரிபார்க்கும் நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்படுமா, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திடீர் ஷாக்கில் திமுக..! எடப்பாடி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி...!!!