BREAKING: 20 கோடி மோசடி வழக்கில் தவெக நிர்வாகி சரவணன் அதிரடி கைது! புதுக்கோட்டையில் பரபரப்பு...!!!
புதுக்கோட்டையில் தவெக நிர்வாகி சரவணன், அதிக லாபம் தருவதாக கூறி ரூ.20 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். 49 பேர் புகார் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ரூ.20 கோடி வரை முதலீட்டு மோசடி செய்ததாக எழுந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அதிக லாபம் தருவதாக நம்பவைத்து பணம் பெற்றதாக கூறப்படும் தவெக செயற்குழு உறுப்பினர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் புதுக்கோட்டை மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் சரவணன் என தெரியவந்துள்ளது. பலரிடமும் குறுகிய காலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என கூறி முதலீடு பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
49 பேர் அளித்த புகார்
சரவணனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறி 49 பேர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரில், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆரம்ப கட்ட விசாரணையில் சுமார் ₹20 கோடி மோசடி நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சரவணன் கைது செய்யப்பட்டார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தமிழக வெற்றி கழகம் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தவெக தொண்டர்களிடையே அதிருப்தியும் அதிர்ச்சியும் நிலவுகிறது.
இதையடுத்து, திமுக சமூக வலைதளங்கள் இந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆளும் கட்சியின் நிர்வாகி மீது வந்துள்ள மோசடி குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
போலீசார் தொடர்ந்து விசாரணை
இந்த வழக்கில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பண பரிவர்த்தனைகள் மற்றும் முதலீட்டு விவரங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு பணியை மறந்துட்டு அரசியலில் இறங்கிய டீச்சர்! தவெக மேடையில் தலைமையாசிரியர் ஆடிய ஆட்டத்தால்..... பள்ளிக்கல்வித்துறை அதிரடி ஆக்சன்..!!