×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்...! இனிதான் இருக்கு தவெகவின் தள்ளுமுள்ளு..!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தவெகவின் வெற்றி வாய்ப்புகளை ஆய்வு செய்து விஜய் தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார்.

Advertisement

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்ற நிலையில், அடுத்தகட்டமாக திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் கவனம் திரும்பியுள்ளது. இந்தத் தேர்தல்கள் தவெக அரசின் சட்டமன்ற பலத்தை அதிகரிக்க முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகின்றன.

5 தொகுதிகளிலும் வெற்றி பெற தவெக தீவிரம்

தற்போதைய 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தவெகவுக்கு 110 உறுப்பினர்கள் இருக்கின்றன. தனிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், காலியாக உள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவது ஆளுங்கட்சிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: அடுத்த வெற்றிக்கு அதிரடியாக தாயாராகும் தவெக! 5 தொகுதியும் கைப்பற்ற... ரூ. 1,500 கோடியை அள்ளி வீசி முதல்வர் விஜய் போடும் அரசியல் கணக்கு! திக்குமுக்காடும் எதிர்க்கட்சிகள்..!!!

இதற்கிடையே, மீதமுள்ள தொகுதிகளில் தவெகவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து உளவுத்துறை மற்றும் கட்சி நிர்வாகிகள் நடத்திய ஆய்வு அறிக்கைகள் முதலமைச்சர் விஜய்யின் கவனத்துக்குச் சென்றுள்ளதாக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி கிழக்கு, விராலிமலையில் சாதகமான சூழல்

ஆய்வுகளின்படி, விஜய் ஏற்கனவே வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, விராலிமலை தொகுதிகளில் தவெகவுக்கு சாதகமான நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் கடும் போட்டியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், அங்கு வெற்றி வாய்ப்பு சவாலாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளும் விஜய்

இந்த நிலையில், கட்சியின் பலத்தை அதிகரிக்கவும் தேர்தல் பணிகளை வலுப்படுத்தவும் விஜய் இடைத்தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருவதாகத் தெரிகிறது. அங்கு மக்களின் குறைகளைக் கேட்டறிவதுடன், தொகுதிகளின் தற்போதைய அரசியல் நிலவரத்தையும் அவர் ஆய்வு செய்து வருகிறார்.

தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே கள நிலவரத்தை அறிந்து, அதற்கேற்ப வியூகங்களை வகுப்பதே இந்தப் பயணங்களின் நோக்கமாகப் பார்க்கப்படுகிறது. 5 தொகுதிகளிலும் தவெக எத்தகைய வெற்றியைப் பெறும் என்பது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கியத்துவம் பெறும்.

 

இதையும் படிங்க: தவெகவின் அடுத்தக்கட்ட பிளான்..! துணை முதல்வர் பதவிக்கு குறி வைக்கும் பாமக? அதிரும் தவெக தலைமை..! வாக்கு வித்தியாசத்தை கண்டு விஜய் எடுத்த திடீர் முடிவு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தவெக இடைத்தேர்தல் #விஜய் தேர்தல் வியூகம் #TVK Bypolls #தமிழக சட்டமன்றம் #5 தொகுதிகள் தேர்தல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story