BREAKING: சற்று முன்..... தவெக அரசுக்கு இவ்வளவு அவசரம் ஏன்? எங்களுது ஆதரவு கிடையாது.....! சட்டசபையில் CM விஜய்க்கு அதிர்ச்சி..!!!
மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் எதிர்த்துள்ளன. எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. மசோதாவின் முழு விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மசோதா விவரம் தெரியாமல் அவசரம் ஏன்?
தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, மசோதாவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதே தெளிவாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார். அப்படியிருக்கும்போது தமிழக வெற்றிக் கழக அரசு இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: திமுக- வின் தீர்மானமான முடிவு இதுதான்... முதல் கட்டத்திலேயே விஜய்க்கு ஆப்பு.! தமிழக அரசியலில் பரபரப்பு..!!!
மசோதா தாக்கல் செய்த பிறகே ஆய்வு
இதனிடையே, பாஜக தரப்பில் போஜராஜன் வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானம் தற்போது பரிசீலனையில் மட்டுமே இருப்பதால், முறையாக மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் அதன் முழு அம்சங்களையும் ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என பாமக எதிர்ப்பு
பாமகவைச் சேர்ந்த கணேஷ் குமார், தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வந்தால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகளும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை தங்கள் கட்சி எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால், மறுவரையறை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: 850 தொகுதிகள் என்றால் ஒரு MP-க்கு 96 நிமிடங்கள் தானா? இதில் 10 கோடி செலவு! மனோ தங்கராஜின் பகீர் கணக்கால் அதிர்ச்சியில் அரசியல் களம்!!!