×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரதமரை மேடையில் அமரவைத்து பாடம் எடுத்த முதல்வர்; இது தான் திராவிட மாடல்...!

பிரதமரை மேடையில் அமரவைத்து பாடம் எடுத்த முதல்வர்; இது தான் திராவிட மாடல்...!

Advertisement

பிரதமர் மோடியை மேடையில் அமரவைத்து பாடம் எடுத்தவர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி மு க இளைஞர் அணி தலைவர் பேச்சு.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்றது. 

இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திருச்சி சிவா, மூத்த நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது. அதுவும் கலைஞரின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக இருப்பது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கலைஞர் இன்னும் நம்மோடுதான் இருக்கிறார். அவருடைய எண்ணம் தான் நம்மை இன்னும் வழிநடத்தி செல்கிறது.

இன்று பலபேர் திராவிட மாடல் ஆட்சி குறித்து விளக்கங்கள்  கேட்கிறார்கள் . திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பது குறித்து நான் ஒரு சிறிய விளக்கத்தை கூறுகிறேன். 

பத்து நாட்களுக்கு முன்பு நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருந்தார். அப்போது நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களையே மேடையில் அமர வைத்து இதுதான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் மாநில சுயாட்சி என்று மேடையிலேயே பாடம் எடுத்தவர் நம்முடைய முதல் அமைச்சர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

நம்பர் ஒன் முதல்வர் என்று பெயர் எடுத்து விட்டாலும், தமிழகம் நம்பர் ஒன் மாநிலம் என்பதே பெருமை என்று முதல்வர் உழைத்து கொண்டிருக்கிரார். இவ்வாறு அவர் பேசினார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Prime minister #Chef minister #narendra modi #M K Stalin #Dravidian model
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story