#அதிர்ச்சி செய்தி.... திருமாவளவனுக்கு முதல்வர் பதவி..... யாரும் எதிர்பாராத திருப்பம்! தமிழக அரசியலில் பரபரப்பு.!!!
திராவிட கட்சிகள் ஒன்றிணைந்து திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற சிந்தனைச் செல்வனின் பதிவு தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் குறித்து தொடர்ந்து பேச்சுகள் எழுந்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள கருத்து புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து திருமாவளவன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
திராவிட கட்சிகளுக்கு விடுத்த கோரிக்கை
சமூக வலைதளமான முகநூலில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில் மாற்று அரசியல் தலைமையை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக சிந்தனைச் செல்வன் குறிப்பிட்டுள்ளார். அதற்காக அனைத்து திராவிட கட்சிகளும் ஒரே அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அந்த அணியின் முதல்வர் முகமாக தொல். திருமாவளவனை முன்னிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் மட்டும் இதை செய்தால் திமுகவின் தோல்வி உறுதி!! எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்..
இதனால் அரசியல் கூட்டணி அமைப்புகள் குறித்த புதிய கணக்குகள் பேசப்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தலித் அரசியல் மற்றும் திராவிட அரசியல் இணையும் வாய்ப்புகள் குறித்தும் விவாதம் உருவாகியுள்ளது.
விஜய் அரசியல் குறித்து விமர்சனம்
அதே பதிவில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையையும் சிந்தனைச் செல்வன் விமர்சித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ள விஜய் அரசியல் அலை என்பது ‘Gen Z’ மனநிலையால் உருவான ஒன்று மட்டுமே என்றும், அதில் ஆழமான அரசியல் மாற்றத்திற்கான அடையாளம் இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்தாலும் உடனடியாக ஆட்சி அமைக்கும் சூழல் இல்லை என கூறியுள்ள அவர், அதற்குள் மாற்று தலைமையை உருவாக்கும் அரசியல் முயற்சி தேவைப்படுகின்றது என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.
அரசியல் களத்தில் புதிய விவாதம்
சிந்தனைச் செல்வனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இது புதிய அதிகாரப் பகிர்வு குறித்த சைகையாக பார்க்கப்படுகிறது. மேலும் வரும் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளதையும் இந்த பதிவு வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...கூட்டணி குறித்து தவெக தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! சூடு பிடிக்கும் அரசியல் கலம்!!!