×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த எம்.ஜி.ஆராக உறுவெடுத்த விஜய்! ஆளுநர் ஐயா... குழந்தைகள் குமுறுகிறார்கள்! விஜய்யை ஆட்சி அமைக்க அழையுங்கள்! இணையத்தில் வைரலாகும் தம்பி ராமையாவின் வீடியோ !!!

விஜயை உடனடியாக ஆட்சி அமைக்க அழைத்து பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என நடிகர் தம்பி ராமையா ஆளுநரிடம் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் நிலையில், நடிகர் தம்பி ராமையா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தவெக தலைவர் விஜயை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் அவர் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

வீடியோவில் பேசிய தம்பி ராமையா, “ஆளுநர் அர்லேக்கர் ஐயா, குழந்தைகள் சார்பாக கேட்கிறேன். அடுத்த எம்.ஜி.ஆராக உருவெடுத்துள்ள விஜய்யை ஆட்சி அமைக்க அழையுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய்யின் வெற்றி உறுதி! எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.... அடுத்த முதல்வர் விஜய்தான்! கிரக நிலையின் அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு!!!

“40 சதவீத வாக்குகள் விஜய்க்கு”

தகவலின்படி, விஜய்க்கு தமிழக மக்களிடமிருந்து பெரிய ஆதரவு கிடைத்துள்ளதாகவும், சுமார் 2 கோடி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளதாகவும் தம்பி ராமையா கூறியுள்ளார். “40 சதவீத வாக்குகள் விஜய்க்கு கிடைத்திருக்கிறது. அவர் எப்போது பதவியேற்பார் என்று குழந்தைகளே கேட்டு வருகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, புதுச்சேரியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களும் நிலைமையை புரிந்து கொண்டு விஜய்க்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“2 வாரம் அவகாசம் கொடுங்கள்”

ஆளுநரிடம் நேரடியாக கோரிக்கை வைத்த தம்பி ராமையா, “விஜய்க்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்குங்கள். பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால் மீண்டும் தேர்தல் நடத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “108 இடங்கள் இருக்கின்றன. மக்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது” என கூறியுள்ள அவரது பேச்சு, அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வீடியோ வெளியாகிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: மெஜாரிட்டி இருக்கா? அது வெறும் டிராமா.. பின்னணியில் யாரு..? ஆளுநரின் முடிவுக்கு எதிராக.... விஜய்க்கு ஆதரவாக தமிழகத்தில் திரலும் புதிய புரட்சி.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thambi Ramaiah #விஜய் #Tamil Nadu Politics #governor #TVK
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story