×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம்: திரெளபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் ஆதரவு..!

ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம்: திரெளபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் ஆதரவு..!

Advertisement

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் வியூகம் வகுக்கும் குழு கூட்டத்தில் இதை அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து சந்திரபாபு நாயுடு மேலும் கூறியதாவது:-

தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் சமூக நீதிக்கு துணை நிற்கும். கடந்த காலத்தில், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரை ஆதரித்துள்ளோம். அதே உணர்வில், பழங்குடி இனத்தை சேர்ந்த திரெளபதி முர்முவை ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆந்திராவில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்  திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Draupadi Murmu #NDA #Telugu Desam #Chandrababu naidu #President Election
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story