×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்பச் செய்தி! டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஷ்!!!

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களின் புதிய சம்பள விவரங்களுடன் ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய சம்பள விவரங்கள்

புதிய அறிவிப்பின்படி, டாஸ்மாக் விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ரூ.19,413 ஆகவும், மேற்பார்வையாளர்களின் மாதச் சம்பளம் ரூ.22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! மீண்டும் மீண்டும் வங்கி கணக்கில் 1000+ 2,500+ 5000.....முதல்வர் ஸ்டாலினின் சர்ப்ரைஸ் கிப்ட்!!!

நுகர்வோர் நலனுக்கும் முக்கியத்துவம்

சம்பள உயர்வு குறித்து அமைச்சர் விக்னேஷ் பேசுகையில், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் நுகர்வோர் நலனையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக இது அமையும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பணியாளர்களின் பணிச்சூழலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கட்டுப்பாடு

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக எழுந்து வரும் புகார்களுக்கு இந்த நடவடிக்கை தீர்வாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இனி டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

இதையும் படிங்க: பகல் கொள்ளையாள இருந்துருக்கு.... ஹாட்டுக்கு 90.. பீருக்கு 40.. ஒயினுக்கு 20...! இதுவரை அமுக்கிய பணத்தை அப்படியே மீட்டெடுத்த அரசு..... டாஸ்மாக் கட்சி நிதிக்கு முதல்வர் விஜய் வைத்த ஆப்பு..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tasmac #Salary Hike #தமிழ்நாடு #ஊதிய உயர்வு #Liquor Shops
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story