அப்படி போடு... இபிஎஸ்ஸின் அடுத்த வியூகம்! தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் களமிறங்கும் அதிமுக! அனல் பறக்கும் அரசியல் பலம்!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக வியூகங்கள் வேகமெடுக்க, கேரளா உள்ளாட்சி தேர்தலிலும் கட்சி வேட்பாளர்களை களமிறக்கத் தொடங்கியுள்ளது.
தமிழக அரசியல் சூழல் மீண்டும் திருப்புமுனை நோக்கி நகர்கிறது. வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு முக்கியக் கட்சிகள் பல்வேறு கணக்கீடுகள் மற்றும் கூட்டணித் திட்டங்களால் அரசியல் பரப்பை சூடேற்றியுள்ளன.
2026 தேர்தலை நோக்கி அதிமுக வியூகங்கள்
இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெறவுள்ள 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இம்முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன்காரணமாக பாஜகவுடன் கூட்டணியைத் தெளிவுபடுத்திய அதிமுக, வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற பல வியூகங்களை தீட்டிவருகிறது.
இதையும் படிங்க: செம குஷியில் எடப்பாடி பழனிசாமி! மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி! அனல் பறக்கும் அதிமுக களம்...!!!
கேரளா உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டி
இந்த அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில், அடுத்த மாதம் நடைபெற உள்ள கேரளா உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தன்னுடைய நிலைப்பாட்டை வலுப்படுத்த முயல்கிறது. டிசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இத்தேர்தல்களில் இடுக்கி, பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
முதல் கட்ட வேட்பாளர் அறிவிப்பு
கட்சியின் விரிவாக்கத்தை பொறுத்து, முதல் கட்டமாக மொத்தம் 28 வேட்பாளர்களை ஈபிஎஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் கேரளாவில் கட்சியின் அடிப்படை வலுவை உயர்த்தும் முயற்சியில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலும், கேரளாவில் உள்ளாட்சி தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், இரண்டு மாநிலங்களிலும் அதிமுக எடுத்துள்ள இந்த அரசியல் முயற்சிகள், கட்சியின் எதிர்கால நிலைப்பாடை தீர்மானிக்கும் முக்கியக் கட்டமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சி! ஒவ்வொரு தொகுதியிலும் 50,00 ஆயிரம் வாக்குகள்.... யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.!