×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தராஜனுக்கு இப்படியொரு நிலையா? இதோ விவரம்..

tamilasai sowndarajan election results

Advertisement

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்திய அளவில் பாஜக கூட்டணி 342 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற மாநில கட்சிகள் 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகள் பெரிதாக எங்குமே வெற்றிபெறவில்லை. 

தமிழகத்திலும் பெருமளவில் திமுக அணியே 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் தூத்துக்குடி தொகுதியில் திமுகவை சேர்ந்த கனிமொழி 115671 வாக்குகள் பெற்றுமுன்னிலை பெற்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 40374 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும்  சுயேட்சை வேட்பாளர் புவனேஷ்வரன் 22003 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியின் ராஜசேகர் 8539 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilisai #Thoothukudi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story