இக்கட்டான இழுப்பறியில் சிக்கிய தவெக விஜய்! இன்னும் 12 வேணும்..... என்ன நடக்கபோது... திமுக ஆட்சியா? இல்ல 6 மாதத்தில் தமிழகத்தில் அடுத்த தேர்தலா? பரபரப்பு தகவல்!!!
தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தொங்கு சட்டப்பேரவை உருவானது. தவெக 108 இடங்கள் பெற்றும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்க, அரசியல் கணக்கில் பெரிய மாற்றம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்கள் பெற்று முன்னிலை பெற்றாலும், ஆட்சி அமைக்க வேண்டிய எண்ணிக்கை எட்டாததால் நிலைமை குழப்பமாக உள்ளது. 59 ஆண்டுகளாக நீடித்த திமுக-அதிமுக ஆதிக்கம் உடைந்தது குறிப்பிடத்தக்கது.
தவெக முன்னிலை... ஆனால் பெரும்பான்மை இல்லை
மொத்தம் 234 தொகுதிகள் உள்ள சட்டப்பேரவையில், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் தேவை. ஆனால் தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றதால், ஒரு இடத்தை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதையடுத்து சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் பலம் 106 ஆக குறையும்.
சிறிய கட்சிகளின் ஆதரவு முக்கியம்
ஆட்சி அமைக்க விஜய்க்கு இன்னும் 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் சேர்த்து 20 இடங்களை வைத்துள்ளன. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல், தேமுதிக ஆகியவை திமுக அணியில் உள்ளன. அதிமுக அணியில் பாமக, பாஜக, அமமுக உள்ளன. இக்கட்சிகளில் சில ஆதரவு வழங்கினால்தான் ஆட்சிக்கான வாய்ப்பு திறக்கும்.
இதையும் படிங்க: திமுக விற்கு 2026 அரசியல் அக்னிப் பரீட்சை! இருமுனை சவால்! மேஜிக் நம்பருக்கு வைத்த செக்! கசிந்த ரகசியத் தகவல்!
ஆளுநர் முடிவு என்ன?
தற்போது மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து ஆளுநர் இரண்டு வழிகளில் முடிவு எடுக்கலாம். முதலில், தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சி அமைக்க அழைத்து பெரும்பான்மை நிரூபிக்கச் சொல்லலாம். அல்லது, ஆதரவு தரும் கட்சிகளின் எழுத்து ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்கலாம்.
இந்நிலையில், தவெக தேவையான ஆதரவை பெற முடியாவிட்டால், இரண்டாவது பெரிய கட்சியான திமுக-க்கு வாய்ப்பு கிடைக்கலாம். யாரும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசியலில் உருவான இந்த மாற்றம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: BREAKING: சர சரவென எகிரும் திமுக! 56 தொகுதிகளில் திமுக முன்னிலை.. அதிமுக, தவெக வின் நிலை என்ன.? வெளியான தகவல்!!!