#Breaking: ஆரம்பமே அமர்க்களம்.. விஜய், உதயநிதி முன்னிலை.. விறுவிறுப்பாகும் தேர்தல் முடிவுகள் 2026..!
TVK Vijay: தபால் வாக்குகளில் விஜய் முன்னிலையில் இருக்கிறார்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் தபால் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
Tamil Nadu Assembly Election Results 2026: தமிழகமே எதிர்பார்த்த 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்புடன் வெளியாகி வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், விஜய் முன்னிலையில் இருக்கிறார்.
தபால் வாக்குகளில் விஜய் முன்னிலை:
இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், 75 தபால் வாக்குகள் பெற்று விஜய் முன்னிலையில் இருக்கிறார். தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை தொகுதியான சென்னை பெரம்பூரில் விஜய் போட்டியிட்டு இருந்தார். திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி. சேகர் 25 வாக்குகள் பெற்று பின்னிலையில் இருக்கிறார்.
இதையும் படிங்க: திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!
தபால் வாக்குகள் பொதுவாக திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், முதல் முறையாக விஜய்க்கு 75 வாக்கு பெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது. இன்று மாலைக்குள் யார் தமிழகத்தை ஆட்சி செய்யப்போகிறார் என்பது தெரியவந்துவிடும்.
அதே நேரத்தில், சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி தொகுதியில் தபால் வாக்குகள் 21 பெற்று திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இருக்கிறார்.
இதையும் படிங்க: திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!