உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வேட்புமனுவில் அவரே கூறிய தகவல்கள்!!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம். சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்த நிலையில் அவரது சொத்து விவரங்கள் வெளியாகின.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு அரசியல் களம் வேகமெடுத்து வருகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மாநிலம் முழுவதும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணைப்படி, ஏப்ரல் 6ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். அரசு விடுமுறை நாட்கள் காரணமாக இடைப்பட்ட சில தினங்களில் மனு தாக்கல் நடைபெறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனால், தேர்தல் சூழல் அடுத்த சில நாட்களில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல்
இந்த நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வருகையை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.
இதையும் படிங்க: அதிமுக என் உயிரோடு கலந்த கட்சி! இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்! உயிர் மூச்சு இருக்கும் வரை அது EPS க்கு தான் ஜெயராமன் பரபரப்பு பேட்டி.!
மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அவரது சொத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெளியான சொத்து விவரங்கள்
வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, உதயநிதி ஸ்டாலினுக்கு ரூ.12.92 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.7.72 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. அவரது மனைவி கிருத்திகாவுக்கு ரூ.13.25 கோடி அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிருத்திகா பெயரில் ரூ.1.87 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதயநிதியிடம் கையிருப்பாக ரூ.50,000 மற்றும் கிருத்திகாவிடம் ரூ.75,000 இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சொத்து விவரம் பட்டியலில், நிலம் மற்றும் வாகனங்களும் இடம்பெற்றுள்ளன.