BREAKING: சற்று முன்.... 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை நீட்டிப்பு! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!!!
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடையை செப்டம்பர் 8 வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதனால் உடனடி தேர்தலுக்கு தடை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவை முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இடைத்தேர்தல் தடை செப்டம்பர் 8-ம் தேதி வரை தொடரும்.
5 தொகுதிகள் எப்படி காலியானது?
சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதில் பெரம்பூர் தொகுதியை அவர் தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்.... அதிமுக -வில் இருந்து விலகி தவெக- வில் CM விஜய் முன்னிலையில் இணைந்த முக்கிய புள்ளி!!!
அதேபோல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகின.
இடைத்தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு
இந்த தொகுதிகளுக்கான முந்தைய தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இடைத்தேர்தல் நடத்தினால் அரசுப் பணம் வீணாகும் என்றும், ஒரே தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் உருவாகும் அரசியல் சாசனச் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, தேர்தல் ஆணையம், முதல்வர் உள்ளிட்ட தரப்பினர் பதிலளிக்க உத்தரவிட்டது.
செப்டம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்ட தடை
முன்னதாக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையின் காலம் நிறைவடைந்த நிலையில், அதை நீக்கக் கோரி தவெக தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை நீதிமன்றம் தொடர்ந்தது.
இதையடுத்து, 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பான தடை செப்டம்பர் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காலியாக உள்ள தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது தள்ளிப்போயுள்ளது.
இதையும் படிங்க: ரூ.35 கோடி பேரத்தில் கைதாகி... சிறையில் இருந்து வெளிவந்த திருநாவுக்கரசு சொன்ன அடுக்கடுக்கான பகீர் உண்மை...!!!