×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என்னை நம்புனவங்கள கைவிட மாட்டேன்". பதவியை தூக்கி எரிந்து SP வேலுமணி சொன்ன அந்த ஒரு வார்த்தை! அதிர்ச்சியில் எடப்பாடி!!!

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்துள்ளார். தன்னை நம்பி உழைத்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை தாம் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்துள்ளார். தன்னை நம்பி நீண்ட காலமாக உழைத்து வந்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது முடிவுக்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உழைத்தவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்

எஸ்.பி. வேலுமணி கூறுகையில், கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்த சி.வி. சண்முகம், பி. தங்கமணி, கே.சி. வீரமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் தன்னுடன் உறுதியாக நின்று பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார். அவர்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை மட்டும் தாம் ஏற்றுக்கொள்வது சரியாக இருக்காது என்றார்.

இதையும் படிங்க: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்த முக்கிய புள்ளி! செம ஷாக்கில் எடப்பாடி!!!

''என்னை நம்பியவர்களை கைவிட மாட்டேன்''

தன்னை நம்பி உழைத்த நிர்வாகிகளை புறக்கணித்துவிட்டு, தனிப்பட்ட முறையில் பதவியை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், அவர்களின் பங்களிப்பே தனக்குக் கிடைக்கும் எந்தப் பொறுப்பையும் விட முக்கியமானது என்றும் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தினார்.

உட்கட்சியில் பரபரப்பு

எஸ்.பி. வேலுமணியின் இந்த அறிவிப்பு, அதிமுக உட்கட்சி அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எஸ்.பி. வேலுமணி எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, கட்சியின் எதிர்கால நிர்வாக அமைப்பு மற்றும் பொறுப்புகள் குறித்த ஆலோசனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

இதையும் படிங்க: இத யாரும் எதிர்பார்க்கலையே... இவங்களுக்கு மட்டும் தான் முக்கிய சீட்! அதிமுக உள்கட்சி விவகாரத்தில் எடப்பாடியின் அதிரடி அறிவிப்பு.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sp velumani #அதிமுக #Edappadi Palaniswami #AIADMK #சி.வி. சண்முகம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story